உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருப்பூர் / சாலையில் பாயும் கழிவுநீர்; பாவம்... பொதுமக்கள்

சாலையில் பாயும் கழிவுநீர்; பாவம்... பொதுமக்கள்

சாக்கடை அடைப்பு தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளி வீதியில் உள்ள சாக்கடை கால்வாய் கழிவுகள் தேங்கி அடைத்துக் கிடக்கிறது. கழிவு நீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியும், துர்நாற்றமும் அதிகரித்துள்ளது. - காயத்ரி, தென்னம்பாளையம். குப்பை மலை திருப்பூர் ரயில்வே பீடர் ரோட்டில், குப்பை கழிவுகளை கொண்டு வந்து மலை போல் குவித்து வைத்துள்ளனர். ரோட்டில் வாகனங்கள் செல்லக் கூட வழியில்லாத நிலை உள்ளது. - ஹரிஷ், திருப்பூர். மழைநீர் தேக்கம் லட்சுமி நகர் பிரதான ரோடு, நீண்ட நாட்களாகவே பழுதடைந்து காணப்படுகிறது. மழை நாட்களில், கழிவு நீரும் சேர்ந்து ரோட்டில் தேங்கி அவதி ஏற்படுத்துகிறது. - தவுபீக், லட்சுமி நகர். குழாய் சேதம் தாராபுரம் ரோடு, புதுார் பிரிவு அருகே குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. இதில் வெளியேறும் குடிநீர் சாக்கடை கால்வாயில் வீணாகச் செல்கிறது. - மீனாட்சி சுந்தரம், புதுார் பிரிவு. சாலை சீராகுமா? அவிநாசி ரோட்டில் உள்ள குமார் நகர் கிழக்கு முதல் வீதியில் குழாய் பதிக்க தோண்டிய குழி முறையாக மூடி ரோடு போடாமல் உள்ளது. வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். - விஜி, கூட்டுறவு நகர். தளம் சேதம் பாளையக்காடு, கோல்டன் நகர் ரயில்வே பாலம் அருகே, கான்கிரீட் தளம் சேதமடைந்து உள்ளது. வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. - ராமச்சந்திரன், கோல்டன் நகர். சாலை மோசம் திருப்பூர் மங்கலம் ரோட்டிலிருந்து பிரிந்து செல்லும் ஏ.பி.டி., ரோட்டில் குழாய் பதிக்க ரோட்டின் குறுக்கில் தோண்டிய குழி முறையாக மூடப்படாமல் உள்ளது. இதனால், வாகனப் போக்குவரத்து சிரமமாக உள்ளது. - மனோஜ்குமார், திருப்பூர். குப்பை தேக்கம் சூசையாபுரம், காலனி பகுதியில் ரோட்டோரம் குப்பை குவிந்து கிடக்கிறது. அப்பகுதியைக் கடந்து செல்லவே முடியாத நிலை உள்ளது. - வின்சென்ட்ராஜ், ராயபுரம். பாயும் கழிவு நீர் பல்லடம் ரோடு, சுலோச்சனா மில்ஸ் அருகே, சாக்கடை கால்வாயிலிருந்து வெளியேறும் கழிவு நீர் ரோட்டில் பாய்கிறது. இதனால், கடைக்காரர்கள், பாதசாரிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. - சுரேஷ்குமார், பல்லடம் ரோடு. குப்பை தேக்கம் வேலம்பாளையம் ரோட்டில், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பல நாட்களாக குப்பை கழிவுகள் தேங்கி கிடக்கிறது. பள்ளி மாணவர்கள், அவ்வழியாகச் செல்லும் பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். - ரவி, கணியாம்பூண்டி. செல்ல வழியில்லை மங்கலம் ரோடு, செங்குந்தபுரம், 6 வது வீதியில் கழிவு நீர் கால்வாய் கழிவுகள் தேங்கி அடைத்துக் கிடக்கிறது. கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. - தேவிபிரியா, ெசங்குந்தபுரம். கடப்பதில் சிரமம் கொங்குமெயின் ரோடு, திருநீலகண்டபுரம் 2வது வீதியில் கழிவு நீர் ரோட்டில் பாய்ந்து செல்கிறது. மாநகராட்சி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் இந்த இடத்தைக் கடந்து செல்லமுடியாமல் சிரமப்படுகின்றனர். - கோபாலகிருஷ்ணன், கொங்கு மெயின் ரோடு. * ரியாக் ஷன் ஒளிர்கிறது தேசிய நெடுஞ்சாலையில் செங்கப்பள்ளி சந்திப்பில் மின் விளக்குகள் இல்லாதது குறித்து புகார் வெளியிடப்பட்டது. இதையடுத்து அங்கு தெரு விளக்குகள் பொருத்தப்பட்டன. - கார்த்தி, ஊத்துக்குளி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி