| ADDED : ஜூலை 16, 2024 11:34 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் புதிதாக துவங்கியுள்ள, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், ஜூலை 31ம் தேதி வரை, நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.அதன்படி, பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன், ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகலாம்.குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர், மின்னணுவியல், மெக்கானிக் எலக்ட்ரிக் வண்டி உள்ளிட்ட பிரிவுகளுக்கு இரு ஆண்டு பயிற்சியும், மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் பிரிவிற்கு ஓராண்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது.இந்த பயிற்சிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக் காலத்தில் பயிற்சி கட்டணம் ஏதுமில்லை.பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு உதவித்தொகையாக மாதந்தோறும் 750 ரூபாய் உதவித்தொகை, இலவச மிதிவண்டி, இரண்டு செட் சீருடைக்கான துணி, தையற் கூலி, இலவச புத்தகங்கள், இலவச சேப்டி ஷூ, பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.ஒரகடம் தொழிற்பயிற்சி நிலையத்தை 94449 08701, 94459 43451 மற்றும் 88382 77278 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.