உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பொறாமைப்படாதீர்கள் ராஜு!

பொறாமைப்படாதீர்கள் ராஜு!

என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, 'என் மகனோ, மருமகனோ, குடும்பத்தில் இருக்கும் வேறு யாருமோ, அரசியலுக்கு வர மாட்டர்' என்று உறுதி கூறினார் ஸ்டாலின்.ஆனால் தன் மகன் உதயநிதியை அரசியலுக்கு கொண்டு வந்து, தி.மு.க.,வின் இளைஞர் அணிச் செயலராக்கினார். அதன் பின் உதயநிதி, எம்.எல்.ஏ.,வாக, இப்போது மந்திரியும் ஆகிவிட்டார். விரைவில் துணை முதல்வர் பதவி இவருக்கு கொடுக்கப்படப் போகிறது என்ற பேச்சும் அடிபடுகிறது.'ஸ்டாலின் பேச்சில் முரண்பாடுகள் அதிகம் உள்ளன' என்று, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தெர்மாகோல் புகழ் செல்லுார் ராஜு, கமென்ட் அடித்திருக்கிறார்.ஏதோ ஸ்டாலின் மட்டுமே தன் வாரிசுக்கு, கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பதவிகள் தந்து வாரிசு அரசியலை உருவாக்குகிறார் என்று ராஜு சொன்னால், அதில் எந்தவித நியாயமும் இல்லை.பா.ம.க., நிறுவனர் ராமதாசும் அப்படி தானே சொன்னார். ஆனால், தன் மகன் அன்புமணியை எம்.பி.,யாக்கினார் அல்லவா!'நான் அரசியலுக்கு வந்து பட்ட அவஸ்தைகள் போதும்; என் மகன் துரை அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை' என்று சொன்னார் மானமிகு வைகோ. இன்று துரை, எம்.பி.,யாகவும், ம.தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார்.எம்.ஜி.ஆருக்குத் திருமணம் நடந்தாலும்; வாரிசுகள் இல்லை; அவர் அண்ணன் சக்கரபாணிக்கு மகன்கள் இருந்தாலும், கட்சியில் எந்த பதவியும் வழங்கவில்லை.ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகாததால் வாரிசுகள் இல்லை; அவர் அண்ணனுக்கு, மகன், மகள் இருந்தும், கட்சி வாசனை கூட அவர்கள் மீது படக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்தார் ஜெயலலிதா.அண்ணாதுரைக்கு வளர்ப்பு மகன்கள் இருந்தனர்; அப்படியிருந்தும் தன் மகன்களுக்கு கட்சியில் எந்த பதவியும் அவர் வழங்கவில்லை.தலைவர் காமராஜர், கட்டைப் பிரம்மச்சாரி என்பதால் அவர் வாரிசு அரசியலுக்கு ஆளாகவில்லை.தி.மு.க.,விலும், அ.தி.மு.க.,விலும் இருக்கும் முக்கிய புள்ளிகளின் வாரிசுகள் கட்சியில் 'பவர்புல்'லாக தானே வலம் வருகின்றனர். சிலருக்கு எம்.எல்.ஏ.,பதவியும், சிலருக்கு எம்.பி., பதவியும், சிலருக்கு கட்சிப் பதவிகளும் இருக்கத்தானே செய்கின்றன.அரசியலில் யாரும், சத்தியம் தவறாத உத்தமர்கள் இல்லை.எனவே, செல்லுார் ராஜு, கருணாநிதி குடும்பத்தினரைப் பார்த்து பொறாமைப்படுவதில் அர்த்தமே இல்லை.

பழனிசா மி தன் முடிவை கைவிட வேண்டும்! ப.ராஜேந்தி ரன், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும், 2026ல் சட்ட சபைத் தேர் தலில் தி.மு.க., தனித்து போட்டியிட விரும்புகிறது என்கிறது செய்தி. லோக்சபா தேர் தலில் 40 தொகுதி களையும் கைப்பற்ற தி.மு.க.,வின் உழைப்பு, பணம், அரசுத் திட்டங்கள் மட்டுமே மிகவும் உதவி செய்திருக்கிறது என்பது உண்மை தான். கூட்டணி கட்சிகளின் பங்கு இதில் சொற்பமே.

சொத்து வரி, மின்சாரம்போன்றவற்றில் மக்களின்தலைமேல் சுமை வைக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் தி.மு.க.,வின், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மாதம் ரூபாய் 1,000, மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ரூபாய் 1,000 போன்ற திட்டங்கள்தான் பெரும்பான்மையான வாக்காளர்களை தி.மு.க.,வின் பக்கம் சுண்டியிழுத்திருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணிஇல்லாமல் காங்., கட்சி நின்றால், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவது கூட கடினமே. அதே போன்ற நிலைமை தான் வி.சி., கட்சிக்கும். காரணம் தி.மு.க., தான் அவற்றுக்கு எதிரானதாக இருக்கும். லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வின் மகத்தான வெற்றிக்கு இன்னொரு காரணம், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியின் பிரிவு என்று தான் கூற வேண்டும். இதே நிலைமை நீடித்தால் 2026ல் நடக்க போகும் சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., தன் அமைப்பாளர்களுக்கு மீன் குழம்பு, கறி விருந்தைத் தான் பரிமாறிக் கொண்டிருக்கும். இப்போதைய சூழ்நிலை தி.மு.க.,வுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. காங்., -- வி.சி., கட்சியினர் கூட்டணி இல்லாமல் கூட ஆட்சியில் அமர முடியும் என்ற தெம்புடன் இருக்கின்றனர். இதை மாற்ற அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்க முன்வர வேண்டும். 'நான் தான் அ.தி.மு.க.,' என, ஓரிரண்டு கட்சிகள் கூறி வரும் இத்தருணத்தில்பழனிசாமி யோசித்து முடிவு எடுத்து, 'தனித்து நின்று போராடுவேன்' என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். 

சிந்திப்பீ ர்களா சித்து? ரெ.ஆத்மநாதன், கடோவிஸ், போ லந்து நாட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி தண்ணீரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்து தருவதும், நாம் மேட்டூரில் அதைத் தேக்கி டெல்டாவில் விவசாயம் செய்யப் பயன்படுத்துவதும், ஒவ்வோர் ஆண்டும், மேட்டூர் அணையை ஜூன் 12ல் திறப்பதும் வாடிக்கை!

கடந்த சில ஆண்டுகளாக, ஆட்சியாளர்களின் குறுக்கீடு காரணமாக, காவிரி நீர்ப் பங்கீட்டில் பிரச்னைகள் தோன்றவே, ஆணையங்கள், உச்ச நீதிமன்ற முறையீடு என்று, இரு எதிரி நாடுகளின் பிரச்னை போல் அதை ஆக்கி விட்டனர் கர்நாடக அரசியல் வாதிகள்!மேலும், ஆணையங்களின் உத்தரவை மதிக்காமல், தமிழகத்திற்குத்தாரைவார்ப்பதாக நினைத்து, சட்டத்தையும்மீறி அறிக்கை விடுவதையே ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த ஆண்டும், தினமும்ஒரு டி.எம்.சி., தண்ணீரைக் காவிரியில் திறக்கச் சொன்னபோது, முதலில் முடியாது என்று இறுமாப்பாக அறிக்கை விட்டவர்கள் அப்புறம், 8,000 கன அடி திறப்பதாகச் சொன்னார்கள். பின் மழை கொட்டித் தீர்த்தது.இப்போது திறந்து விட்டாச்சு.கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உங்களிடமிருந்து, தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரை மட்டும் தான் அவர்கள் கேட்கின்றனர்; கூடுதலாகஅல்ல. பிச்சைக்காரர்கள்போல் அவர்களைநடத்தாதீர்கள்.திறந்து விடக் கூடிய நீரை தடை செய்தால், திடீரென ஒரு நாள்வெள்ளத்தில் தத்தளிக்கும்நிலை உங்களுக்கு ஏற்படும். சிந்தித்து நீங்கள் செயல்படுவீர்கள் என நம்புகிறோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை