உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மாஜி முதல்வர் தொகுதியில் மாயமான பிளாஸ்டிக் ஒழிப்பு!

மாஜி முதல்வர் தொகுதியில் மாயமான பிளாஸ்டிக் ஒழிப்பு!

''கிட்டத்தட்ட ஒன்றரை மாசமா பணியிடம் ஒதுக்காம இருக்காங்க பா...'' என, மசாலா டீயை பருகியபடியே விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''யாருக்கு வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''சென்னை மாநகர கிழக்கு மண்டல போலீஸ்ல, மூணு வருஷத்துக்கு மேலா பணிபுரிந்தவங்க மற்றும் வெளி மாவட்டங்கள்ல இருந்து பணிமாறுதல்ல வந்தவங்கன்னு, 45 போலீசாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாத்தினாங்க... ''இவங்கள்ல, 20க்கும் மேற்பட்ட பெண் போலீசாரும் இருக்காங்க பா... இவங்களுக்கு வள்ளுவர் கோட்டம், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட்டம் நடக்கும் இடங்கள், எழும்பூர் நீதிமன்ற பாதுகாப்பு பணி மட்டுமே ஒதுக்குறாங்க...''பொதுவா, காத்திருப்போர் பட்டியல்ல, 40 நாளுக்கு மேல யாரையும் வைக்க கூடாதுங்கிறது விதி... ஆனா, இங்க ஒன்றரை மாசத்தையும் தாண்டியும், 45 போலீசாரையும் காத்திருப்பு பட்டியல்ல வச்சு அதிகாரிகள் வஞ்சிக்கிறதா, அவங்க எல்லாம் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''கிரிமினல் ரெக்கார்ட்சை எல்லாம் அனுப்பிண்டு இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''கோவை தொகுதி லோக்சபா தேர்தல்ல, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தோல்வி அடைஞ்ச பிறகு, அவ்வளவா கோவைக்கு வரதில்ல... ''அதுவும் இல்லாம, தேர்தல்ல தனக்கு எதிரா வேலை பார்த்த கட்சியினர் யார், யார்னு பட்டியல் எடுத்து, தேசிய தலைமைக்கு அனுப்பியிருக்கார் ஓய்...''இந்த சூழல்ல, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பா.ஜ., பெண் நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டது, கட்சி மீது தவறான இமேஜை ஏற்படுத்திஇருக்கோல்லியோ... ''இதனால, பா.ஜ., நிர்வாகிகள்ல மாவட்ட வாரியா யார், யார் மேல என்னென்ன கிரிமினல் வழக்குகள் இருக்குன்னு மத்திய உளவுத்துறையினர் பட்டியல் எடுத்து, தேசிய தலைமைக்கு அனுப்பிண்டு இருக்கா ஓய்...''கோவையில, முக்கியமான கஞ்சா வியாபாரி ஒருத்தரை கட்சியில் சேர்த்ததோடு, அவரை கோவை ஏர்போர்ட்ல பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்ததுல, முக்கிய தலைவர் ஒருத்தர் உதவி பண்ணதாகவும், மேலிடத்துக்கு தகவல் போயிருக்கு... 'இவாளை எல்லாம் கட்சியில இருந்து படிப்படியா நீக்குங்க'ன்னு மேலிடத்துல இருந்து உத்தரவு வந்திருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.''ஆதியும், அமர் பிரசாத்தும் வர்றாங்க... கொஞ்சம் தள்ளி உட்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''வளம் கொழிச்சிட்டு இருக்காருங்க...'' என்றார்.''எந்த துறை அதிகாரியை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''சேலம் மாவட்டம், இடைப்பாடி நகராட்சியில், சுத்தம், சுகாதாரத்தை கவனிக்க வேண்டிய அதிகாரி ஒருத்தர் இருக்காரு... இவர், சுகாதாரம் சார்ந்த எந்த பணியையும் பார்க்கிறதே இல்லைங்க...''தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், இந்த நகராட்சி ஏரியாவுல சர்வசாதாரணமா புழங்குதுங்க... அதேபோல் ஹோட்டல்கள்லயும் சாம்பார் உள்ளிட்ட குழம்பு வகைகள், டீ, காபியையும் பிளாஸ்டிக் கவர்ல கட்டி குடுக்கிறாங்க...''முன்னாள் முதல்வர் பழனிசாமியின் சொந்த தொகுதியான இங்க, அவரது ஆட்சியில பிளாஸ்டிக்கே இல்லாம இருந்துச்சு... ஆனா, இப்ப தலைகீழா மாறிடுச்சுங்க... இதை எல்லாம் கண்டுக்காம இருக்கிற அதிகாரிக்கு கணிசமான, 'கட்டிங்' கிடைக்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.''முருகன், இந்த பேப்பரை அங்கன வையும்...'' என, நண்பரிடம் கூறியபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கனோஜ் ஆங்ரே
ஜூலை 26, 2024 19:56

///அமர் பிரசாத்-/// இந்த அமர்பிரசாத்தும், அண்ணாமலையும் பண்ண அழிச்சாட்டியும் என்னென்ன... இப்ப சிக்கிக்கிச்சிப் பாரு...? “அடேய் சோனமுத்தா... போச்சா...?”... இன்னா பேச்சு பேசுனான இந்த அமர் பிரசாத்.....? எப்பா....?


kannagasabai
ஜூலை 26, 2024 11:45

முருகன் கவனம்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை