கிருஷ்ணகிரியில் புதிய ஐ.டி.ஐ., காணொலியில் முதல்வர் திறப்பு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அவதானப்பட்டியில் புதிய ஐ.டி.ஐ., திறப்பு விழாவை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி அருகிலுள்ள தனியார் கட்டடத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, 35 மாணவ, மாணவியர் சேர்க்கைகளுக்கு ஆணைகளை வழங்கி பேசியதாவது:கிருஷ்ணகிரி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தின், 25 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடம், இயந்திரங்கள் தளவாடங்கள் மற்றும், 50 மாணவர்கள் தங்கும் விடுதி வசதியுடன் காட்டிநாயக்கனப்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு அருகில் அமைய உள்ளது. இது, 172 மாணவர்கள் பயன்பெறும் வகையில் மொத்தம், 6 தொழிற்பிரிவுடன் செயல்பட உள்ளது. தற்போது தொழிற்பயிற்சி நிலையத்தில் மேலும் காலியாக உள்ள இடங்களுக்கு, நேரடி சேர்க்கை நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார். மாவட்டசெல்வம், தொழிலாளர் நல உதவி ஆணையர் மாதேஷ்வரன், ஐ.டி.ஐ., கல்லுாரி முதல்வர் பொறுப்பு சாமுவேல் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.