உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / போலீஸ்காரரை தாக்கிய போதை வாலிபர் கைது

போலீஸ்காரரை தாக்கிய போதை வாலிபர் கைது

வடபழனி, மெட்ரோ ரயில் நிலையத்தில் போதையில் நுழைய முயன்ற போது தடுத்த போலீஸ்காரரை தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 23; போலீஸ்காரர்.தற்போது, வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளார்.நேற்று முன்தினம் இரவு பணி முடிந்த பின், சாதாரண உடையில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.அப்போது, மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் மதுபோதையில் வந்த வாலிபர் ஒருவரை, சிலம்பரசன் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த போதை வாலிபர், சிலம்பரசன் முகத்தில் குத்தியுள்ளார்.இதில், சிலம்பரசனின் மூக்கு மற்றும் தாடை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.விசாரணையில், போலீஸ்காரரை தாக்கிய வாலிபர், பட்டாபிராம் மேற்கு கோபாலபுரம் பிரதான சாலையைச் சேர்ந்த ஆகாஷ், 25, என தெரிந்தது. மேலும் இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிந்தது.இதையடுத்து ஆகாஷை, போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ