| ADDED : மார் 13, 2024 10:49 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் கிராம ஊராட்சிகளை நிர்வாகிக்கும் பி.டி.ஓ., எனும் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, அதே ஒன்றியத்தில் இளநிலை பொறியாளர் பாளையம் ஆகியோர், அப்பகுதிகளில் நடக்கும் பணிகளை முறையாக கண்காணிக்க வேண்டும்.இவர்கள், சில நாட்களுக்கு முன் நடந்த, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட வளர்ச்சி பணிகளை கண்காணிக்கவில்லை.தவிர, செய்யாத வளர்ச்சி பணி நிறைவேற்றப்பட்டதாக, பொறியாளர் பொய்யாக பரிந்துரை செய்துள்ளார். அதை விசாரிக்காமல், வட்டார வளர்ச்சி அலுவலர் 'பில்' வழங்கி உள்ளார். இது, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி துறை பொறியியல் பிரிவு துறை அதிகாரிகள் ஆய்வின்போது தெரிய வந்தது.இதையடுத்து, துறை உயரதிகாரிகளின் பரிந்துரைபடி, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, ஒன்றிய இளநிலை பொறியாளர் பாளையம் ஆகிய இருவரையும், தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைசெல்வி உத்தரவிட்டுள்ளார்.மேலும், உத்திரமேரூர் ஒன்றியத்தில், வட்டார நிர்வாகம் மற்றும் கிராம ஊராட்சிகளில் செய்யப்படும் அனைத்து விதமான பணிகளை கண்காணிக்கவும், ஊரக வளர்ச்சி துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.