உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / கான்கிரீட் பெயர்ந்த காஞ்சிவாக்கம் பள்ளி கூரை

கான்கிரீட் பெயர்ந்த காஞ்சிவாக்கம் பள்ளி கூரை

ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட காஞ்சிவாக்கம் கிராமத்தில் இயங்கிவரும் அரசு தொடக்கப் பள்ளியில், 40க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இந்த பள்ளி கட்டட கூரை கான்கிரீட் பெயர்ந்து சேதமடைந்து உடைந்து உள்ளது. நேற்று முன்தினம் முதல், ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையினால், சேதமடைந்துள்ள கான்கிரீட் பெயர்ந்த பகுதி, மழைநீரில் நனைந்து மேலும் உதிர்ந்து வருகிறது.எனவே, மாணவ - மாணவியரின் நலன் கருதி, கோடை விடுமுறையில், சேதமான பகுதிகளை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை