உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

வழிப்பறி திருடன் கைது புதுநல்லுாரில், கடந்த 28ம் தேதி வாலிபர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம், நகையை வழிப்பறி செய்த, நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த கறி செல்வம், 27, என்ற ரவுடி யை, சோமங்கலம் போலீசார் நேற்று கைது செய்தனர். வேன்களில் பேட்டரி திருட்டு ஓட்டேரியைச் சேர்ந்த முகமது மரக்கையார், 40, மற்றும் மகேந்திரா ராஜ், 31, உட்பட ஐந்துக்கும் மேற்பட்டோரின் 'டாடா ஏஸ்' ரக சரக்கு வேன்கள், பெரம்பூர் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் இருந்து 20,000 ரூபாய் மதிப்புள்ள நான்கு பேட்டரிகளை, மர்ம நபர்கள் திருடி சென்றாக, ஓட்டேரி போலீசில் வாகன உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர். 525 வாகனங்கள் ஏலம் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 525 வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் விபரங்கள், https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. உரிமை கோருவோர், 15 நாட்களுக்குள் அணுக வேண்டும். உரிமை கோரப்படாத வாகனங்களை, பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. குட்கா கடத்தல் வானகரம் ஓடமா நகர் பாலம் அருகே, நேற்று முன்தினம் வானகரம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஆட்டோவை மடக்கி சோதனை செய்தபோது, அதில், 21 கிலோ ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, அனகாபுத்துாரை சேர்ந்த நாகராஜ், 38, துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மகேஷ், 45, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை