உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / தலைமறைவு ஆட்டோ ஓட்டுனருக்கு போக்சோ

தலைமறைவு ஆட்டோ ஓட்டுனருக்கு போக்சோ

ஆவடி, ஆவடியைச் சேர்ந்த 41 வயது பெண், கருத்து வேறுபாடால் கணவனை பிரிந்து 15 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர், அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார்.இவர்களது வீட்டின் மேல் தளத்தில் குடியிருக்கும் சுஜித், 38; ஆட்டோ ஓட்டுனர். கடந்த ஓராண்டாக சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன், சுஜித்திற்கு பெங்களூரில் வேலை கிடைத்ததால், மனைவியுடன் அங்கு குடி பெயர்ந்தார்.இதை அறிந்த சிறுமி நடந்தவற்றை தாயிடம் கூறியுள்ளார். வழக்கு பதிவு செய்த ஆவடி மகளிர் போலீசார் தலைமறைவாக இருந்த சுஜித்தை, நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை