உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / லாரியில் துணி திருடமுயன்ற இருவர் கைது

லாரியில் துணி திருடமுயன்ற இருவர் கைது

சேலம், சேலம் காடையாம்பட்டி அருகே, ஜோடுகுழி பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார், 32, லாரி டிரைவர். நேற்று முன்தினம், துணி லோடு ஏற்றிக்கொண்டு, சீலநாயக்கன்பட்டி பகுதியில் வரும்போது, சின்ன பச்சைக்காடு என்ற இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது, லாரியில் உள்ள பொருட்களை இருவர் திருடுவதற்காக தேடிக் கொண்டிருந்தனர். அங்கிருந்தவர்களின் உதவியுடன், அசோக்குமார் அவர்களை பிடித்து அன்னதானப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ், 32, காந்திமகான் தெருவை சேர்ந்த பால்ராஜ், 50, என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுத்தி, ஸ்பேனர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரையும் கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பிரசன்ன வெங்கட்ரமண கோவிலில் வரும் 10ல் சொர்க்கவாசல் திறப்பு விழா ஓமலுார், பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், வரும் ௧௦ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படவுள்ளது. காடையாம்பட்டி தாலுகா, காருவள்ளி சின்னத்திருப்பதியில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா வரும், 9ம் தேதி துவங்குகிறது. அன்று இரவு, 7:00 மணிக்கு பெருமாள் நாச்சியார் கோலத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மறுநாள், 10ல், அதிகாலை, 4:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, மூலவர் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலிக்கவுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை