தகவல் சுரங்கம் : தேசிய இளைஞர் தினம்
தகவல் சுரங்கம்தேசிய இளைஞர் தினம்இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜன. 12, தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1863 ஜன., 12ல் கோல்கட்டாவில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே ஆன்மிக சிந்தனை கொண்ட இவர் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தார். 1881ல் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். 1886ல் துறவியானார். சாதுக்களாக மட்டுமல்லாமல் வீரமாகவும் துறவிகள் இருக்க வேண்டும் என்பார். நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று பண்பாடு, கலாசாரம் குறித்து போதித்தார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.