அய்யோ கொதிக்குதே!
இது சுடுநீர் நீரூற்றாகும். சில நேரங்களில் இந்த நீரூற்றிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் வெந்நீர், 200 அடி உயரத்தில் எழும்பும். ஐஸ்லாந்திலுள்ள பெரும் பகுதிகள் அக்னிக்குழம்பு வயல்களாவும், சூடான நீரூற்றுகளாகவும் இருக்கின்றன. இந்த வெந்நீர் நிரூற்றுகளால் இல்லங்கள் எப்போதுமே கதகதப் பாகவே இருக்கும். பதினான்காவது நூற்றாண்டின் முதல் பகுதியில் தான் இந்த வெந்நீர் நீரூற்று செயல்படத் தொடங்கி யுள்ளது. அமெரிக்காவிலுள்ள எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிலுள்ள இந்த வெந்நீர் நீருற்று, பழமை வாய்ந்த நம்பிக்கை என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு அறுபத்து ஐந்து நிமிடத்தில் இடைவெளியின்றி, தவறாமல் இது சுடுநீரை பீறிட்டு வெளியே தள்ளுகிறது.