மீனுக்கு தாகம் எடுக்குமா?
மீன்களில் சில தண்ணீரை குடிக்கும். மற்றவை, தண்ணீரில் நீந்துவதோடு சரி. உப்பில்லாத நன்னீரில் வசிக்கும் மீன்களுக்கு, உடலில் உப்பு தன்மை அதிகமாக இருக்கும். நன்னீர் மீன்களின் செவுள்கள், எப்போதும் தண்ணீருக்குள் இருப்பதால், அதன் ரத்தத்தில் உப்பு தன்மை குறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால், நன்னீர் மீன்கள் தண்ணீர் குடிக்காது.உப்பு நீரில் வாழும் மீன்களுக்கு, ரத்தத்தில் உப்பு, பிற தாதுக்கள் குறைவாக இருக்கும். அதனால் அவை தண்ணீர் குடிக்கும்.