வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
46 வருடத்திற்குப் பிறகு!
1966 ஜனவரி 24-ம் தேதி 117 பயணிகளுடன் பறந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. அதில், பலியானவர்களில் ஒருவர் இந்திய அணுசக்தி துறையின் தலைவரான விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கிர் பாபா.அந்த விபத்தில் சிதறிய பொருட்களில் இருந்து ஒரு பையை கடந்த செப்டம்பர் மாதம் கண்டுபிடித்துள்ளனர்.'மிகவும் ரகசியம்- வெளியுறவுத் துறை' என்று எழுதப்பட்டு இருந்தது. அந்தக் கடித பையை அப்படியே பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்திருக்கின்றனர். என்ன ரகசியம் அதில் இருக்கோ!
புயலை கடந்த பொம்மை!
உலகின் புயல் வேக மனிதர் என்ற பெயரை பெற்று இருப்பவர், உசேன் போல்டு.சமீபத்திய ஒலிம்பிக்கில் கூட அதனை நிரூபித்தார். அப்படிப்பட்ட அவருக்கு ஒரு போட்டியாளர் உருவாகி இருக்கிறார். போல்டின் மணிக்கு 27.8 கி.மீ., தூர சாதனை வேகத்தை தாண்டி, 28.3 கி.மீ., தூரத்தை தொட்டிருக்கிறார் இந்த சாதனையாளர்.ஆனால், இந்த அசுர சாதனையின்போது அவருக்கு ஒரு சொட்டு கூட வியர்க்கவில்லை. காரணம், அவர் ரோபா!அமெரிக்க ராணுவம் வடிவமைத்து இருக்கும் அந்த ரோபோவின் பெயர் சீட்டா. 'எதிர்க் காற்று உரசல் இல்லாமல் டிரெட் மில் இயந்திரத்தில்தான் சீட்டா இந்த வேகம் ஓடியிருக்கிறது. அதற்கு சக்தி கொடுக்கும் பேட்டரியின் எடையையும் அது சுமக்கவில்லை.இப்போதைக்கு போல்ட்தான் உலகின் வேகமான மனிதர்!' என்கின்றனர் சீட்டாவின் பொறியாளர்கள்.
ஆல் இன் ஆல் சைக்கிள்!
அசத்தல் வசதிகளுடன் கார்களை தயாரித்து விற்கும் ஆடி நிறுவனம், இப்போது சைக்கிள் ஒன்றை தயாரித்து இருக்கிறது. ஆஸ்திரியா கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த சைக்கிள், பார்த்த உடனேயே ஆளை அசத்துகிறது.பார்க்க ஸ்போட்ஸ் சைக்கிள் போல இருந்தாலும், இதன் வசதிகள் இந்தியாவின் பல பைக்குகளில் கூட கிடையாது. சைக்கிள் என்று சொன்னாலும், இது இ-பைக்!'ஸ்போர்ட்ஸ் மெஷின்' என்கின்றனர் ஆடி ஆட்கள். அதாவது, இதில் ரிலாக்ஸ்டாக சைக்கிள் ஓட்டலாம், விறுவிறு ரேஸில் கலந்து கொள்ளலாம். அதிரடி ஸ்டன்ட்களில் ஈடுபடலாம்.மிக குறைந்த புவியீர்ப்பு விசை மட்டுமே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த சைக்கிள், பேட்டரியின் சக்தி அல்லது மனித உழைப்பு... என இரண்டு வகையிலும் இயங்கும்.மணிக்கு 80 கி.மீ., வேகம் வரை செல்லும் இந்த சைக்கிளின் இயக்கத்தை உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் தீர்மானிக்கலாம். சைக்கிள் பூட்டுவது, பூட்டை திறப்பது, இயக்கத்தின் இயல்பை தீர்மானிப்பது, இருக்கையின் உயரத்தை ஏற்றி, இறக்குவது என எல்லாமே ஸ்மார்ட் போன் மூலம் முடிக்கலாம்.நீங்கள் இந்த சைக்கிளின் மூலம் செய்யும் ஸ்டன்ட் வித்தைகளை அப்போதே உடனடியாக இணையத்தில் பதிவேற்றலாம்.மிக சமீபத்தில்தான் உலகின் பிரபல பைக் நிறுவனமான டுகாட்டியை வாங்கி யிருக்கிறது ஆடி. அந்த ஜோரில் இந்த இ-பைக்கை காட்சிக்கு வைத்திருப்பதால், இரு சக்கர வாகன சந்தையில் ஆடியின் முத்திரை அழுத்தமாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பு.இந்த சைக்கிளை இப்போதே வாங்க ஆசையாக இருக்கிறதா?ஆனால், 'இப்போதைக்கு விற்பனைக்கு இல்லை. ஜஸ்ட் ஷோ பைக்தான்' என்கிறது ஆடி நிறுவனம்.
சிந்தும் முன் சிந்தியுங்கள்!
வாழ்வில் சிந்துதல் என்றால் அது திரவம் சம்பந்தப்பட்டது. மூன்று திரவம் நமது வாழ்வில் மிக மிக முக்கிய மானது.வியர்வை சிந்தி உழைக்கணும். ரத்தம் இல்லாமல் வாழ முடியாது. தண்ணீர் இல்லாமல் உயிரே உலகினில் இல்லை.நமது பூமியில் தண்ணீர் ஒன்றே இயற்கையாக மூன்று நிலைகளில் அதாவது திரவமாக, காற்றாக மற்றும் திடப்பொருளாக கிடைக்கிறது. மனிதன் மட்டுமே தண்ணீரை அதிகமாக உபயோகிக்கிறான்.மேலும், இந்த அளவு வருடந்தோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஐரோப்பியர் உபயோகிக்கும் தண்ணீரின் அளவை விட அமெரிக்கர் ஐந்து மடங்கு அதிகமாக பயன்படுத்து கின்றனர். மனிதன் சராசரியாக 190 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு பயன்படுத்து கிறான்.ஒரு முட்டை உருவாக 450 லிட்டர் நீரும், ஒரு கோழியை தயாரிக்க (உணவாக) 44 லிட்டர் நீரும், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் உணவு தயாரிக்க ஒரு நாளைக்கு ஒரு 25,700 லிட்டர் நீரும் செலவாகிறது.ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை சுத்திகரிக்க 7,000 லிட்டர் நீரும், ஒரு காரை உருவாக்க 1,48,000 லிட்டர் நீரும் செலவாகிறது. உலகில் இன்று கிட்டத்தட்ட 400 மில்லியன் மக்கள் குடிநீர் இன்றி கடுமையாக தவிக்கின்றனர். ஒரு சதவீதத்திற்கும் குறைவான நீரே நமது பூமியில் குடிக்க கூடிய நிலையில் உள்ளது.ஒரு மனிதன் இந்த பூமியில் உணவின்றி ஒரு மாதம் வரை வாழ முடியும். நீரின்றி ஒரு வாரம் கூட வாழ இயலாது. நீரை சேமிப்போம். இப்போதைக்கு மட்டுமல்ல. நம் எதிர்கால சந்ததிக்கும் சேர்த்து நீரை சேமிப்போம்.ஏனெனில் நீர் இன்றி அமையாது உலகு!
அம்மா! ப்ளீஸ்.. செஞ்சுத்தாங்கம்மா!
இது 'பலுடா' செயல்முறை நேரம்.
தேவையான பொருட்கள்: பால்-1 லிட்டர், ரோஸ் எசென்ஸ்-2 டீஸ்பன், கிரீம்-அரை கப், பாதாம், பிஸ்தா-தலா கால் கப், ரோஸ் சிரப்-கால் கப், வெனிலா ஜஸ்கிரீம்-2 சிறிய கப், சப்ஜா விதைகள் (நாட்டு மருந்து கடைகள் அல்லது டிபார்ட்மென்ட்டல் கடைகளில் கிடைக்கும்)-2 டீஸ்பூன், சேமியா-1 கப், பொடியாக நறுக்கிய பழக்கலவை-அலங்கரிக்க.
எப்படி செய்வது: பாலை சுண்டக் காய்ச்சவும். ஆறியதும், 2 டீஸ்பூன் ரோஸ் எசென்ஸ் சேர்த்து கலந்து, குளிர வைக்கவும். சேமியாவை வேக வைத்து வடித்து கொள்ளவும். பாதாம், பிஸ்தாவை சீவியோ, பொடியாக நறுக்கியோ வைக்கவும். சப்ஜா விதைகளை ஊற வைக்கவும். உயரமான கண்ணாடி டம்பளரில் முதலில் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் சிரப் ஊற்றவும்.அதன் மேல் ஒரு குழிக்கரண்டி ஜஸ்கிரீம் வைத்து பழங்கள், பாதாம், பிஸ்தா கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.அன்புடன் உங்கள்,அங்குராசு.