அதிமேதாவி அங்குராசு!
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!மிகச் சிறிய... சிறிய....! எப்படி பெரிய பெரியது, நம்மை அதன் பிரம்மாண்டத்தால் ஈர்க்கிறதோ, அப்படியே உலகில் சிறிய சிறியதும் நம்மை மயக்குகிறது. வைரம்: உலகளவில் மிகச் சிறிய கல் 0.0003 காரட் வைரமாகும். இது நம் இந்தியாவில் உள்ளது. கண்களுக்கு புலப்படாத இந்த விலையுயர்ந்த வைரம், தற்போது கைக்கடிகாரங்களில் பொருத்தப்பட்டு வருகிறது.ஏரி: ஏரி என்றால் பெரியதாக இருந்தால் தானே, நிறைய மக்கள் பயனுறுவர். உலகளவில் மிகச் சிறிய ஏரி, 'டெட்ஏரி'. இது இஸ்ரேலில், ஜோர்டான் பள்ளத்தாக்கில் உள்ளது.பார்க்: உலகளவில் மிகச் சிறிய பார்க்- மில் எட்னஸ் பார்க் (பரப்பளவு: 452 ச.அங்குலம்) இது அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஓரிகன் மாநிலத்தில் போர்ட் லேண்ட் என்னும் ஊரில் உள்ளது.புத்தகம்: உலகளவில் மிகச் சிறிய புத்தகம் டீனி டெட்- பிரம் டர்னிப் டவுன். இதன் அளவு - 0.07 மி.மீட்டர். இது கனடாவில் வெளியிடப் பட்டுள்ளது. மேலும், இது 2007ம் ஆண்டு உலகில் அதிக அளவில் பிரசுரிக்கப்பட்ட புத்தகமாகும்.நாய்: உலகளவில் மிகச் சிறிய நாய் 'மிராகூ மில்லி' இதன் நீளம் - 9.65 செ.மீட்டர். இது சிகுவா குவா என்ற வகையை சேர்ந்தது.பூனை: உலகளவில் மிகச் சிறிய பூனை டிங்கர் டாய். இதன் நீளம் 19 செ.மீட்டர், உயரம் 7 செ.மீட்டர். இது ஹிமாலயன் பெர்ஸியன் என்ற வகையை சேர்ந்தது.பாலூட்டி: உலகளவில் மிகச் சிறிய பாலூட்டி- கிட்டீஸ் ஹாக்- நோஸ்டு-பேட். இதன் அளவு - ஒரு நகத்தின் அளவாகும். இது மடகாஸ்கரில் உள்ளது.பறவை: உலகளவில் மிகச் சிறிய பறவை ஹம்மிங் பறவை. இதன் அளவு - 7.5 முதல் 13 செ.மீட்டர்.நதி: உலகளவில் மிகச் சிறிய நதி- ரோநதி. பரப்பளவு - 201 அடி நீளம். இது அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ளது. மேலும் இது கின்னஸ் விருது வாங்கியுள்ளது.பச்சை ஆமை தீவு!பேக்கர் தீவு, மக்கள் வசிக்காத நிலநடுக் கோட்டிற்கு சற்று வடக்கே மத்திய பசிபிக் பெருங் கடலில் அமைந்துள்ள பவளப்பாறை திட்டாகும்.இது ஹொனலுலுவிலிருந்து 1300 கி.மீ., தொலைவில் உள்ளது.ஹவாய், ஆஸ்திரேலியாவிற்கு இடையே சரிபாதி தொலைவில் உள்ள இந்த தீவு, அமெரிக்க ஆளுமையின் கீழ் உள்ளது.இதன் அண்மையில் உள்ள தீவு வடக்கே 68 கி.மீ., தொலைவில் உள்ள ஹவுலாந்து தீவு ஆகும்.வானிலை நிலநடுக்கோட்டு வலயத்தில் உள்ளதாகும். குறைந்த மழையும், நிறைந்த காற்றும், கூடுதல் சூரிய ஒளியும் மணற்பாங்கான இத்தீவில் நிலவுகின்றன.இந்த பேக்கர் தீவு தேசிய வன வாழ்வு உய்வகமாக அறிவிக்கப் பட்டுள்ளது.குடிநீரில்லாத பேக்கர் தீவில் மரங்கள் வளருவதில்லை. நான்கு வகை புற்கள், செடிகள், புதர்கள் அங்குமிங்கும் வளர்வதை காணலாம்.இத்தீவு பல அழிந்துவரும் இனங்களுக்கு புகலிடமாக உள்ளது. கடற்கரை பறவைகள் தவிர, பச்சை ஆமைகள் போன்ற ஆமையினங்களின் புகலிடமாகவும் உள்ளது.என்றும் அன்புடன், அங்குராசு!