அதிமேதாவி அங்குராசு!
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ரேபீஸ் நாய்!ரேபீஸை பரப்ப தயாராக இருக்கும் நாய்களை வெறி நாய்கள் என்கிறோம். இவற்றை இனம் கண்டு கொள்ள...* நோயால் தாக்கப்பட்ட நாய்கள், வழக்கத்தை விட, பரபரப்பாய் அலையும் அல்லது பரம சாதுவாய் உட்கார்ந்தே இருக்கும்* வாயிலிருந்து எச்சில் வடிந்தபடியே இருக்கும்* கீழ்த் தாடை தொங்கிய நிலையில், நாக்கு வெளியே தள்ளியபடி இருக்கும்* இவ்வளவு அறிகுறிகளும் ஏற்பட்ட பின், நான்கிலிருந்து 10 நாட்களுக்குள் நரம்புகள் செயலிழந்து, நாய் இறந்து விடும்* மிக மிக முக்கிய அறிகுறிகள்- உணவு சாப்பிடுவதை நிறுத்திவிடும். இடை விடாமல் குறைத்து கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் தறி கெட்டு ஓட ஆரம்பிக்கும். எந்த பொருள் கிடைத்தாலும் கடித்து குதற ஆரம்பிக்கும்.இந்த மாதிரி நாய்களை கண்டா கவனமாக இருங்க குட்டீஸ்...வாயு மண்டலம் இல்லையெனில்...சூரியனிலிருந்து, கோடிக்கணக்கான மைல்களை தாண்டி, கதிர்களாக, அண்ட வெளி வழியாக பூமியை நோக்கி வருகிறது வெப்பம். வெப்ப கதிர்கள் பொருட்களை ஊடுருவி செல்லும்போது, அந்த பொருட்களை பாதிப்பதில்லை. இதற்கு காரணம், வாயு மண்டலத்தின் வழியாக சூரிய கதிர்கள் நுழைந்து வரும்போது, வெப்பத்தின் அளவு குறைந்து விடுகிறது.இரவு நேரத்தில், வாயு மண்டலம், பகலில் கிரகித்து வைத்திருக்கும் வெப்பத்தை, பூமிக்கு கிடைக்கும் படி செய்கிறது.வாயுமண்டலமே இல்லையென்றால், பகலில் வெப்பத்தால் பூமியிலுள்ள எல்லாமே எரிந்து சாம்பலாகி விடும்; இரவிலோ அனைத்தும் குளிரில் உறைந்து விடும். சூரிய வெப்பம் தேவை நமக்கு, அதை நமக்கு கிடைக்க செய்வது வாயு மண்டலம்!பறவைதான்... ஆனா ஓடுவோம்!ஈமு, நெருப்புக்கோழி, கிவி, பெங்குயின், ரியா, கேசோவாரி போன்றவை, பறக்காத புகழ்பெற்ற பறவைகள். ஆனால், இவை, ஓடுவதில் கில்லாடிகள். இவற்றுக்கு இறகுகள் இருந்தாலும், தன் உடலை, தானே காற்றில் தூக்க முடியாத அளவுக்கு, பெரிய உருவ அமைப்பு கொண்டிருப்பதால், பறப்பதில்லை. இதில், ஓரளவு உண்மை இருந்தாலும், பறக்காததற்கு அது மட்டுமே காரணமல்ல. அவை வேறு பறவைகளில் இருந்தோ, விலங்குகளில் இருந்தோ பிரிந்து வந்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. இதற்கு உறுதியான சான்றுகள் இல்லை.ஆனால், பறக்காத பறவை இனங்களின் வாழ்விடங்களை பொறுத்தவரை, அவற்றுக்கு எதிரி இனங்களால் பெரிய அளவில் ஆபத்து எதுவும் இல்லையென்பதால், பறக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, அவற்றின் இறக்கைகள் காலப் போக்கில் சுருங்கிவிட்டன. அதனால், இறக்கைகள் பறவையை அந்தரத்தில் உயர்த்தும் திறன் அற்றதாகவும் மாறி விட்டது. ஆனால், அவை உறுதியான உடலையும், சக்தி மிகு கால்களையும் பெற்றிருக்கின்றன. எனவே, அவை அசுர வேகத்தில் ஓடும் திறனுடையது.ஈமு, நெருப்புக்கோழி, கிவி, பெங்குயின், ரியா, கேசோவாரியுடன் உங்களுக்கு ஓட்டப்பந்தயம் வைக்கலாமா?தூசு... நீ யூசு!இயற்கையிலேயே மிக நுட்பமானவை தூசுகள். உலகெங்கும் பரவியுள்ள தூசுகளின் ஆதாரம், பெரும்பாலும் மணல் தான். நாம் நடக்கும்போது, சிமென்ட் ஆலை, கல்குவாரி, மாவு ஆலை உள்ளிட்ட தொழிற்சாலை இயக்கத்திலும், வாகன பயணத்தாலும் தூசுகள் உருவாகின்றன. 55 சதவீத தூசுகள், நாம் பல்வேறு பொருட்களை எரிப்பதன் வாயிலாக கிளம்புகின்றன. இது தவிர, பிற கோள்களில் இருந்து, காஸ்மிக் தூசுகள் பூமியில் பொழிகிறது!பார்வைக்கு நுண் துகள்களாக தென்படும் தூசுகள், பல பெரிய மாற்றங்களை உண்டு பண்ணக்கூடியது. சொல்லப் போனால், வானிற்கு நீல நிறத்தை தருவது, இந்த தூசுகள் தான். விண்வெளியில் பயணிக்கும் தூசுகள், சூரிய ஒளியை சிதற செய்து, கடலின் நீலத்தை எதிரொலித்து, வானிற்கு நிறத்தை வழங்குகிறது.சூரிய அஸ்தமனம் மனதை கொள்ளை கொள்ளும் வகையில், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களில் தோன்றுவதற்கு காரணமும், இந்த தூசுகள் தான். மேகங்கள், மலையுச்சிகள் நிறம் மாறி வினோதமாக தோன்றுவதற்கும், இந்த தூசுகளே காரணம். கடலின் மேற்பரப்பில் வீசும் காற்று, இந்த தூசுகளுடன் உப்பு துகள்களை கலந்து, நிலத்திற்கு அனுப்புகிறது. ஆண்டு தோறும், 300 மில்லியன் டன் உப்பு கலந்த தூசுப் படிவுகள், தரைக்கும் அனுப்பப்படுகிறது.பசிபிக் தீவுகளில் ஒன்றான, கிரகடோவாவில், 1883ல் திடீர் வெடிப்பில் உருவான பெரும் தூசுப்படலம், மூன்று ஆண்டுகளுக்கு இயல்பு நிலையை பாதித்தது.'ஆந்தோ...' உன் வேலை தானா இது!எல்லா செடிகளும் பச்சை நிறமானவை. ஆனால், பூக்களோ வெவ்வேறு நிறமானவை. அதில் பூக்கிற பூக்களை, அழகிகளாக மாற்றுவது, வண்ணமும், வாசனையும் தானே.வண்ண வண்ணப் பூக்கள், அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும். பூக்களின் நிறங்களுக்கு தாவரங்களின் நிறமிப் பொருளான, 'ஆந்தோசயனின்' தான் காரணம் என்பதை உங்களில் பலர் அறிந்திருக்கலாம். ஆனால், பூக்கள், ஊதா, நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை என, பல வண்ணங்களில் பூத்து குலுங்க, இந்த ஒரே நிறமி எப்படி காரணமாகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா...ஆந்தோசயனின், என்பது கிரேக்க சொல்லாகும். ஆந்தோ என்றால் பூ; சயனின் என்றால் நீலம் என்றும் பொருள்.முதன் முதலில், நீல நிறப் பூக்களில் இருந்து, இந்த நிறமி பிரிந்தெடுக்கப் பட்டதால், இப் பெயர் சூட்டப்பட்டது. மற்ற வண்ணப் பூக்களுக்கும் இந்த நிறமியே அடிப்படையாக இருப்பதும் அறியப்பட்டது.தாவரங்களின் செல்சாற்றில், நீலநிறமிகளான ஆந்தோசயனின் கலந்திருக்கும். அதனுடன் நாம் சத்துப் பொருளாக இடும், அமில காரச் சேர்க்கையால் பூக்கள் மற்றும் இலைகள் நிறம் பெறுகின்றன. உதாரணமாக, காரச் சத்து அதிகம் கிடைக்கும்போது, சிவப்பு நிறம் பிறக்கிறது.அலுமினியச்சத்து அதிகம் கிடைக்கும் தாவரங்களின் பூக்கள், நீல நிறமாக பூக்கின்றன. இரும்புச் சத்து மிகுந்தால், ஊதா நிறமாகவும், குறிப்பிட்ட அளவில் இரும்பும், பிற தாதுக்களும் சேர்ந்தால், பச்சை நிறமும் பெறுகின்றன. பாஸ்பரஸ், போரான், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் குறையும் போது தான், தாவரங்களின் இலைகள் மற்றும் பூக்கள், பழுப்பு, மஞ்சள், சிவப்பு என நிறம் மாறுகின்றன.கார்னெல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஒரே செடியில் வெவ்வேறு சத்து பொருட்களை ஊட்டமாக கொடுத்து, வெவ்வேறு வண்ண மலர்களை பூக்க வைத்து சாதித்து உள்ளனர்.வாவ்... சூப்பர்ல!என்றென்றும் அன்புடன், அங்குராசு.