உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!புடவையின் கதை!உலகம் எங்கும் உள்ள ஆடைகளில், மிடுக்கான தோற்றம் கொண்ட புடவைக்கு, சுவையான வரலாறு உண்டு...சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் நீளமான துணியை, இடுப்பில் அணியும் வழக்கத்தை கொண்டிருந்தனர். கொசுவமாக, இரண்டு கால்களுக்கு இடையே, சென்று, பின்புற இடுப்பில் சொருகுவர். பெண்கள், இடுப்பில் மட்டுமே இந்த ஆடையை அணிந்து வந்தனர். மார்பின் மீது, எந்த துணியும் அணியவில்லை. குளிருக்காக, மிருகங்களின் தோல் அல்லது கம்பளி துணிகளை அவ்வப்போது அணிந்து கொண்டனர். நாகரிகம் வளர துவங்கியபின், ஒரு சிறு துணியை, மார்பின் மேல் போர்த்தி, முடிச்சு போட்டு, அணிய துவங்கினர். இது, 'கச்சை' என்றும், கீழே அணியும் துணி, 'நீவி'யென்று அழைக்கப்பட்டது. பருத்தி தவிர, பட்டு, பீதாம்பரம், பட்டோலா துணிகள், ஆரியர்கள், முகலாயர்கள் மூலம் வர துவங்கிய பின், 'உத்தரியா' என்ற, அழகான வேலைப்பாடு கொண்ட, ஒரு துணி கச்சையின் மேலே அணியப்பட்டது.நீவி , இரண்டு கால்களுக்கு நடுவே அணியும் வழக்கம் மாறி, கீழே ஒரு துணியை, இடுப்பை சுற்றி அணிந்து, அழகிய வேலைப்பாடு கொண்ட, மற்றொரு துணியை இடுப்பை சுற்றி கட்டி, நடுவில் முடிச்சு போட்டு அணியப்பட்டது; இந்த துணி, 'ஆசனா' என்று அழைக்கப்பட்டது.கிரேக்கர், பாரசீக மக்கள், மேலே அணியும் துணியை, கொசுவகமாக செய்து, தோள்பட்டையின் ஒருபுறம் போட்டு, இடுப்பில், 'பெல்ட்' அணிவர். இக்கலாசாரம் இந்திய பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பாரசீக மக்கள் தான், முதன் முதலில் துணிகளை தைத்து அணிவதை, இந்தியாவில் அறிமுகப்படுத்தினர். உடலோடு ஒட்டிய வகையில், ஜாக்கெட் அணியும் முறையே, 'சோளி' என மாறியது.துணிகளில், எம்ப்ராய்டரி, கற்கள் பதிப்பு, ஜரிகை வேலைப்பாடு போன்றவைகளை மிகவும் ஆடம்பரமாக, அழகாக மாற்றியவர்கள் முகலாய மக்கள்.சோளி அணியப்பட்ட பின், கீழே அணியும், நீண்ட துணியின் ஒரு பகுதியை, இடுப்பை சுற்றி மேலே வந்து, கொசுவம் செய்து, தோளில் குத்திக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டு, இன்றைய புடவை அணியும் முறை ஏற்பட்டது. கற்களின் பயணம் - யாரும் கண்டறியக் காணோம்!அமெரிக்காவில், 300 கிலோ எடையுள்ள கற்கள், தானாகவே நகருது. இங்குள்ள மரணப்பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும், 'ரேஸ் டிராக்' என்ற இடத்தில் தான், இந்த அதிசய, நகரும் கல் உள்ளது.இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த கற்கள் நகரும். சில கற்கள், நேராகவும், சில கற்கள் பக்கவாட்டிலும், வளைந்து நெளிந்தும், பின்னோக்கியும் நகருகின்றன.இவ்வகை நகரும் கற்களின் ஆயுட்காலம், ஏழு ஆண்டுகள். இவை எப்படி, எந்த சக்தியால், நகருகின்றன, என்பதை, யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் உள்ள மர்மத்தை விளக்க, பல கருத்துகள் வெளியான போதும், எதுவும் நிரூபிக்கப்படவில்லை; மர்மமோ மர்மம்! - என்றென்றும் அன்புடன், அங்குராசு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !