உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!கலப்பட பெட்ரோல்!கலப்பட பெட்ரோலால் நம்முடைய பெட்ரோலுக்கான செலவு அதிகரிக்கிறது. மேலும் நம்முடைய வாகனம், விலைமதிப்பல்லா சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்படைகின்றன. பெட்ரோல் பங்கில் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல்களில், 'கலப்படம் இருக்கிறதா?' என்று எப்படி கண்டுப்படிப்பது? அதற்கு பெட்ரோல் போடும் இடங்களிலேயே ஏதேனும் வசதிகள் இருக்கிறதா?இப்படி விழிப்புணர்வு உடைய அல்லது விழிப்புணர்வு கொள்ள நினைப்பவர்கள் எண்ணுவதுண்டு.பொதுவாக நல்ல பெட்ரோலானது எங்கு சிந்தினாலும் சிறிது நேரத்தில் சிந்திய சுவடு தெரியாமல் மாயமாகிவிடும். கலப்பட பெட்ரோல் மட்டுமே சிந்திய இடத்தில் சிறிய வரைப்படம் போன்று அதன் எல்லை கோட்டை விட்டு செல்லும். நீங்கள் எந்த பங்கில் பெட்ரோல் போட்டாலும், உங்களுக்கு சந்தேகம் வந்தால் அந்த பங்கின் நிர்வாகியிடம் அதை பரிசோதிப்பதற்கான பில்டர் பேப்பர்களை கேட்டு வாங்குங்கள்.அதில் சிறிது பெட்ரோலை விடுங்கள். எந்த தடயமும் இல்லாமல் மாயமாய் மறைந்துவிடும். கலப்படம் இருந்தால் திட்டு திட்டாய் கலப்படம் செய்யப்பட்ட பொருளின் கறை படிந்து நிற்கும். கலப்படம் இல்லாத பெட்ரோலைக் கூட அதன் தரம் எப்படி இருக்கிறது என்று நீங்கள் பரிசோதித்து பார்க்க நினைத்தால் அதற்கான டென்ஸிட்டி மீட்டர் அடர்த்திமானியும் பங்கில் இருக்கும்.அதை வாங்கி டென்ஸிட்டியை அளவிட்டு, பங்கில் போர்டில் எழுதி போட்டிருக்கும் அடர்த்தியும் இதுவும் ஒன்றாக இருக்கிறா என்று சரிபார்த்து கொள்ளலாம்.அதில் ஏதும் முரண்பாடு தென்பட்டால் அந்த பங்கில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரை தெரிவிக்கலாம்.அந்த தொலைபேசி எண்ணும் எல்லா பங்கிலும் எழுதப்பட்டிருக்கும். சென்னையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில் இதற்கெல்லாம் யாருக்கும் நேரமிருப்பதில்லை என இதனை தவிர்க்காமல் முடிந்த நேரத்தில் 'செக்' செய்யலாமே!எளிது சத்தானது!காளான்கள் உண்பதும், இப்போது நகரங்களில் பெருகி வருகிறது. நகர ஓட்டல்களில் இருந்த காளான்கள் இப்போது மெதுவாக வீடுகளில் வந்து விட்டன. இது இப்போது கிராமங்களையும் தொட தொடங்கி உள்ளன. முக்கிய காரணம் இது ஒரு சிறந்த சுயதொழிலான 'காளான் வளர்ப்பை' அறிமுகம் செய்துள்ளது. காளான்களில் பலவகை இருந்தாலும் நாம் இப்போது உணவில் அதிகம், சேர்த்து கொள்வது சிப்பி காளான், மொட்டு காளான் என்கிற இரண்டு வகைகள்தான். மசாலாக்கள் அதிகம் சேர்த்து அசைவம் போல் சாப்பிட நினைப்பவர்களுக்கு சிப்பி காளான் சிறப்பானது.மஷ்ரூம் மசாலா மற்றும் பிரியாணி இதற்கெல்லாம் சிப்பி காளான்தான். மொட்டுக்காளான் சூப் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். தோசை, வடை, போன்றவைகளையும் மொட்டுக்காளானில் சமைக்கலாம். பொதுவாகவே காளான்கள் சமைப்பதற்கு எளிதானவை மட்டுமின்றி சத்தானதும் கூட.விரிப்பது ஈஸி!எப்போதாவது உபயோகப்படும் என்று பெரிய ப்ளாஸ்டிக் ஷீட்டுகளை அலமாரியில் சுருட்டி வைத்து இருப்போம். கசங்கலாக இருக்கும் அதை விரிக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கும். கசங்கல் நீக்கி அதை மீண்டும் விரிப்பதற்கு படாதபாடுபடுவோம்.இதற்கு ஈஸி வழி இருக்கு! ஷீட் மீது காட்டன் துணியை விரித்து லேசாக அயர்ன் செய்துவிட்டால் ஷீட் அழகாக மடியும்.சுனாமி - ஜப்பான் பாணி!இதுவரை வந்ததிலேயே உலகின் மோசமான சுனாமி, ஜப்பானில் வந்த தற்போதைய சுனாமிதான். பஞ்ச பூதங்களும் அடுத்தடுத்து படையெடுத்து வந்து ஜப்பானை அடித்து நொறுக்கி விட்டன.ஆனால், அந்த மிக பெரிய துயரத்திலும் ஜப்பானிய மக்கள் நடந்து கொள்ளும் விதம் பற்றி அறியும்போது நெஞ்சை உருக்குகிறது. அவர்களிடமிருந்து நாட்டுப்பற்று, உழைப்பு சுறுசுறுப்பு என்று நாம் கற்க வேண்டியது ஏராளமாய் இருக்கு. இதுபோன்ற இயற்கையின் ஓட்டுமொத்த ருத்ரதாண்டவத்தின்போது அவர்கள் நடந்து கொண்ட பாணி மூலம் அவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய விஷயங்கள்...அமைதி:இத்தனை சோகத்திலும் மார்பில் அடித்து கொண்டு கதறும் காட்சிகள் எதையும் நம்மால் பார்க்க முடியவில்லை. அவர்களது அமைதியே, அந்த சோகத்தை இன்னும் கனமாக்குகிறது.நம்பிக்கை:தண்ணீருக்கும் உணவுக்கும் பொறுமையோடும் நம்பிக்கையோடும் வரிசையில் நிற்கின்றனர். தள்ளு, முள்ளு, முட்டல் மோதல் எதுவும் கிடையாது.திறன்:கட்டடங்கள் அடித்து செல்லப்பட்டன. ஆனால், நொறுங்கி விழவில்லை. பூகம்பத்தை அடிக்கடி சந்தித்து வந்த அவர்கள் அதை தாங்கி பிடிக்கும் கட்டடங்களை கட்ட கற்று கொண்டு விட்டார்கள். சுனாமிகளையும் ஒரு நாள் ஜெயிப்பார்கள்.பெருந்தன்மை:தங்களுக்கு தேவையானதை மட்டும் வாங்கி கொண்டனர். காசு இருக்கிறது என்று எல்லாவற்றையும் அள்ளி கொண்டு போய் பதுக்கி விடவில்லை. மற்றவர்களுக்கும் கிடைக்கட்டும் எனப் பெருந்தன்மையான நடந்து கொண்டனர்.நேர்மை:ஒரு கடை கூட கொள்ளையடிக்கப்படவில்லை. ஒரு ஏ.டி.எம்., கூட களவாடப்படவில்லை.தியாகம்:அணு உலைக்குள் புகுந்து விட்ட தண்ணீரை வெளியேற்ற 50 ஊழியர்கள் அங்கேயே தங்கி இருந்தனர். கதிர்வீச்சு அபாயம் மக்களை பாதித்து விட கூடாது என்பதற்காக, தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் உழைக்க முன் வந்தனர்.கருணை:உணவகங்கள் விலை குறைப்பு செய்தன. இதுதான் சமயம், 'எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம்' என, நடந்து கொள்ளவில்லை.ஒழுங்கு:பதற்றமான சூழ்நிலையிலும் யாரும் அரக்கபரக்க ஓடவில்லை. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டனர்.கண்ணியம்:கடைகளில் மின்சாரம் போனதும் எடுத்த பொருளை அங்கேயே வைத்து விட்டு வெளியேறினர்என்றென்றும் அன்புடன்,அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !