உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

நன்மை தரும் தயிர்!பால், தயிர், நெய்யில் தயாரான உணவுகளை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். ஏராளமான சத்துக்கள் உள்ளன. உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் பயன்படுகின்றன. தயிரில் உள்ள புரோட்டீன் எளிதில் ஜீரணமாகிவிடும்.தயிர் குளிர்ச்சியானது; நல்ல ஜீரண சக்தியை தரக்கூடியது. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்தில், 32 சதவீதம் தான் ஜீரணமாகும். தயிர் சாப்பிட்ட 60 நிமிடத்தில், 91 சதவீதம் ஜீரணமாகிவிடும்.பாலை, தயிராக மாற்றும் நல்ல பாக்டீரியா, குடலில் நோய் கிருமி வளர்ச்சியை தடுக்கிறது. எனவே தான், வயிறு சரியில்லாத போது, தயிர்சாதம் உண்ணும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பிரியாணி போன்ற சூடு தரும் உணவு வகைகளை சாப்பிடும்போது, வயிற்றுக்கு கேடு விளைவதை தடுக்க, தயிர், வெங்காய கலவை, பக்க உணவாக சேர்க்கப்படுகிறது. 'மெனோபாஸ்' பருவத்தை எட்டும் பெண்களுக்கு, தேவையான கால்ஷியத்தை வழங்குகிறது தயிர். * புளித்த தயிரை தலையில் தேய்த்து குளித்தால் முடி மிருதுவாக இருக்கும் * தயிர், புளிக்காமல் தடுக்க, சிறிய தேங்காய் துண்டு சேர்த்தால் போதும்* வெண்டைக்காய் வதக்கும் போது, ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல், பிசுபிசுப்பு இன்றி இருக்கும் * வாழைப்பூ, வாழைத்தண்டை, தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மங்காது.இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகு துாள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும்.தயிர் சாப்பிட...* உகந்த நேரம் மதியம்* கோடையில் மட்டுமல்ல, குளிர் காலத்திலும் சாப்பிடலாம்* தேன் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண், பல்வலி குணமாகும்* ஓமம் சேர்த்து சாப்பிட்டால், 'அசிடிட்டி' பிரச்னையில் இருந்து விடுபடலாம் * வெந்தயத்துடன் சாப்பிட வயிற்று போக்கு குணமாகும்; வயிற்றுப் பொருமல் அடங்கும்* சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளில் இருந்து விடுபட உதவும். கவனம் தேவை!ஓடும் காரில் குளிர்சாதன வசதியை பயன்படுத்துவதில் உள்ள பிரச்னை குறித்து சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின.காருக்குள் உள்ள டேஷ்போர்டு, இருக்கை மற்றும் உள் பாகங்கள் அனைத்தும் பிளாஸ்டிக்கால் ஆனவை. இவை, 'பென்சீன்' என்ற நச்சை உமிழும்.மனித உடல், ஒரு சதுர அடியில், 50 மில்லி கிராம் பென்சீன் இருந்தால் ஏற்றுக்கொள்ளும். நிழலில் நிறுத்தப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு, 400 முதல், 800 மில்லி கிராம் வரை பென்சீன் இருக்கும். வெயிலில் நிறுத்தப்பட்டிருந்தால், 4 ஆயிரம் மில்லி கிராம் வரை இருக்கும். இது மனித உடல் ஏற்கும் அளவை விட, மிகவும் அதிகம். இதனால், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.காரில் ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைத்தால் பென்சீன் வெளியேறிவிடும். பின், குளிர்சாதன வசதியை பயன்படுத்தலாம். இதை மறக்காமல் பின்பற்றுங்கள்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !