உள்ளூர் செய்திகள்

விளாம்பழ பச்சடி!

தேவையான பொருட்கள்:கனிந்த விளாம்பழம் - 2வெல்லம் - 50 கிராம்உளுந்தம் பருப்பு, மிளகு துாள், கடுகு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:விளாம்பழங்களை உடைத்து ஓட்டிலிருந்து விழுதை பிரித்து எடுத்து நன்கு பிசையவும். இதனுடன், துாளாக்கிய வெல்லம், மிளகுத் துாள், உப்பு சேர்த்து பிசையவும். கடுகு, உளுந்தம் பருப்பை எண்ணெயில் தாளித்து அதில் கொட்டவும்.சுவைமிக்க, 'விளாம்பழ பச்சடி!' தயார். உடல் நலனுக்கு ஏற்றது.- வசந்தா வேணுகோபால், சென்னை.தொடர்புக்கு: 98409 97058


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !