அழகு கையெழுத்து!
சிறுவர்,சிறுமியர் கையெழுத்தை அழகாக்க, 'பைன் மோட்டர் ஸ்கில்' என்ற திறனை பயன்படுத்தலாம். இது கவனத்தை கூர்மையாக்கி, திறனை வளர்க்கும். முறையான பயிற்சி செய்தால் கை தசைகள் வலுவாகும். செயல்கள் சிறப்புடன் அமையும். கை விரல்களுக்கு தினமும் வேலை கொடுக்க வேண்டும். அப்போதுதான் நரம்புகள் தளர்வுடன், கட்டுப்பாட்டில் இருக்கும்.மைதா மாவு, சோள மாவு, கோதுமை மாவை அகலமான தட்டில் பரப்பி எழுத பயிற்சி தரலாம். ஓவியம் வரைய வைக்கலாம். விரல்களுக்கு நெகிழ்ச்சி தன்மை கிடைக்கும்.களி மண்ணை பிசைந்து, விளையாட செய்யலாம். அதில், சிறிய உருவங்கள் செய்ய பழக்கலாம். இதனால், மனம் ஒருங்கிணைந்து செயல்படும்.சில்லறை காசுகளை எண்ணி உண்டியலில் போடச் சொல்லலாம். பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் கற்று கொடுக்கலாம். இதனால், கை நரம்புகள் நன்கு தளர்வு பெறும். இப்படி எல்லாம் பயிற்சி பெறுவதால் சீராக, நினைத்தபடி எழுத முடியும். தொடர்ந்து இது போல் செய்து வந்தால் கையெழுத்து முத்து போல் அழகாகும்.- ஏ.எஸ்.கோவிந்தராஜன்