உள்ளூர் செய்திகள்

பூரிப்பு!

சென்னை, மேற்கு மாம்பலம், ராஜாஜிதெரு, தேவி பாடசாலையில், 1948ல், 5ம் வகுப்பு படித்தேன். அந்த ஆண்டு நடந்த பள்ளி ஆண்டு விழாவில், பாட்டு, நடனம், பேச்சு என போட்டிகளில் பங்கேற்று திறமையை காட்டி பாராட்டு பெற்றேன்.மூன்றிலும் பரிசுகள் கிடைத்தன. அதில் ஒன்று, பீங்கானில் செய்த, கப் அன்ட் சாசர். மிகவும் கவர்ச்சியாக இருந்தது. அதை ஆசிரியர்களிடம் காட்டி ஆசி பெற்று வந்தபோது, கைநழுவி விழுந்து உடைந்து சுக்கலானது. மனம் பொறுக்க முடியாமல், வீரிட்டு அழுதேன். என்னை சமாதானப்படுத்தினார் ஆசிரியை சாரதாமணி. பின், கடையில் அதே போன்ற ஒன்றை வாங்கி தந்து தேற்றினார். அது மிகுந்த மகிழ்ச்சியும், நம்பிக்கையும் தந்தது.தற்போது, என் வயது, 80; இல்லத்தரசியாக இருக்கிறேன். பசுமையான அந்த பள்ளிநாள் நிகழ்வை எண்ணி, இன்றும் பூரிப்படைகிறேன்.- அலமேலு ஜயா, கோவை.தொடர்புக்கு: 99526 42296


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !