கொடுக்கத்தான் பிறந்தாரு!
ஆண்டவரான இயேசு கிறிஸ்து பூமியில் வந்து பிறந்தார். அவர் நம்மிடமிருந்து எக்கச்சக்கமாக, ஏராளமாக கணக்கிட முடியாததை எடுத்துக் கொண்டார்.அவர் நமக்காக எக்கச்சக்கமான, கணக்கிட முடியாத, ஈடே செய்ய முடியாத ஒன்றை கொடுத்து விட்டார். அவர் நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டது எது? அவர் நமக்காக கொடுத்தது என்ன?அவருடைய சரித்திரத்தை அறிந்தவராய் இருந்தால் சொல்லுங்க பார்ப்போம்.அவர் எடுத்து கொண்டது நாம் செய்த பாவங்களை.அவர் தந்து விட்டு போனது அவருடைய இன்னுயிரை அல்லவா?ஆதாம், ஏவாள் செய்த பாவத்தினால் அவர் களை ஏதேன் தோட்டத்தை விட்டு விரட்டியடித்த இறைவன், மனிதர்களை மீட்பதற்காக ஒரு கன்னியின் வயிற்றில் மகனாக வந்து பிறப்பேன் என்று தீர்க்கதரிசிகள் வாயிலாக சொல்லப்பட்டது நிறைவேறும்படி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மரியாளின் வயிற்றில் வந்து தேவகுமாரன் மனிதராகப் பிறந்தார்.இந்த நாளையே கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.கிறிஸ்துமஸ் என்றால் நாம், நம் குடும்பம் மட்டும் சிறப்பாக கொண்டாடுவது அல்ல.அமெரிக்கர்கள் இதற்கு ஒரு பண் பாட்டையே அமைத்துள்ளனர். கிறிஸ்துமஸ் விழாவில் நண்பர்களுக்கு பரிசளிப்பதும், ஏழைகளுக்கு உதவுவதும் அமெரிக்கர் களின் பண்பாடு. கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிக் கென அவர்கள் செலவிடும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்காக ஒதுக்குகின்றனர்.இதற்கென ஆலயங்களில் சிறப்பு உண்டியல்கள் வைக்கப்படுகின்றன.நீங்க யார் யாரின் வாழ்க்கையில் கிறிஸ்து பிறந்த சந்தோஷத்தை பகிர போகிறீர்கள்!நீங்கள் அறியாத கிறிஸ்துமஸ் காட்சிகள்!லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்ஸிகோவில் டிசம்பர் 16ம் தேதி தொடங்கி கிறிஸ்துமஸுக்கு முந்திய ஒன்பது நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.இந்த பண்டிகையை 'போசாடாஸ் பண்டிகை' என்று அழைக்கின்றனர்.பெத்லகேம் நகரில் இயேசுவின் பெற்றோரான யோசேப்பும், மரியாளும் ஆதரவின்றி அலைந்து திரிந்ததையும், கடைசியில் கருணை காட்டப்பட்டு மாட்டு தொழுவத்தில் தங்க அவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டதையும் நினைவுப்படுத்தும் நாட்கள் இவை. இந்த ஒன்பது நாட் களும் ஒவ்வொரு இரவும் குடும்பத்தினரும், நண்பர்களும் கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய நாட்களில் நடந்த சம்பவங்களை நடித்து காட்ட ஒன்று கூடும் பண்டிகை இது.யோசேப்பு, மரியாள் ஆகியோரின் சிலைகளை ஒவ்வொரு வீடாக தூக்கி சென்று, 'பாடல்' பாடி தங்குவதற்கு இடம் கேட்பர்.வீட்டிலிருப்பவர்கள் பாடல் மூலமே தங்க இடம் இல்லை என்பர்.பிறகு தங்க இடம் தர சம்மதிக்கும் வரை, பாட்டு பாடி கொண்டே இருப்பர்.இப்படி தொடங்கும் கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் மாலை 'நோகெப்வீனா' கொண்டாடப் படுகிறது. குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி புளிப்பில்லா அப்பத்துடன் விருந்து பறிமாறி உண்டு மகிழ்வதுடன், அன்று இரவு இயேசுவின் பிறப்புக்காக விழிப்புடன் காத்திருந்து கொண்டாடுகின்றனர்.பழைய பெயர்!கிறிஸ்துமஸ் என்ற சொல் 16ம் நூற்றாண்டில் தான் உருவானது. அதற்கு முன்பு, 'கர்த்தர் கொண்டாட்டம்' என்று தான் அழைக்கப்பட்டு வந்தது.இயேசு பிறந்த பெத்லேகம் மற்றும் உலக நாடுகளில் இயேசு பிறப்பை, 14ம் நூற்றாண்டில் தான் கொண்டாடத் தொடங்கினர்.முதன் முதலில் கிறிஸ்துமஸ் ஜனவரி 6ம் தேதி கொண்டாடப்பட்டதாக பழைய ஜீலியன் நாட்காட்டி குறிப்புகள் தெரிவிக்கின்றன.உரோமாபுரி நாட்டின் அதிகாரப்பூர்வமான விடுமுறை தினமாகவும், பின்னர் கிரிகோரியன் நாட்காட்டியின்படி 1743லிருந்து டிசம்பர் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டதாகவும் வரலாற்று குறிப்பு கள் தெரிவிக்கின்றன.இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் போப்பாண்டவர் ஜீலியஸ் -1 ஆவார்.இந்த நாள் ஏற்கனவே கிறிஸ்துவர்களில் அப்போதைய பெரும் பிரிவினரான பாகான் இனத்தவர்கள் கொண்டாடிய 'சேட்டர் நேலியா' திருவிழா கொண்டாடப்பட்ட நாளாகும்.இந்த கிறிஸ்துமஸ் விழா மெல்ல, மெல்ல கிறிஸ்துவ சமுதாயம் வசிக்கின்ற பகுதிகளில் உலகெங்கும் பரவியது.எகிப்திற்கு 432லும் அங்கிருந்து இங்கிலாந் திற்கு 6ம் நூற்றாண்டின் இறுதியிலும், எட்டாவது நூற்றாண்டின் இறுதியில் ஸ்காண்டினேவியா தீபகற்பம் வரையிலும் பரவியது.பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் எழுந்த மத மறுமலர்ச்சியை ஒட்டி, கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடத் தொடங்கினர்.ஆனால், 1645ல் லிவர் கிராம்வெல் மற்றும் அவருடைய பியூரிட்டன் படைகளும் இங்கிலாந்தை கைப்பற்றிய போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங் களுக்கு தடை விதித்தது.ஆனால், இரண்டாம் சார்லஸ் ஆட்சியை கைபற்றியபோது மீண்டும், கிறிஸ்துமஸ் விழாவை குதூகலமாக கொண்டாட உத்தரவிட கிறிஸ்துமஸ் விழா பிரசித்தி பெற்றது.அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!சிறுநோன்பு - பெருநோன்பு!இஸ்லாமிய நாடான இரானிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இயேசு அவதரித்தபோது அவரை காண வந்த வானியல் அறிஞர்கள் மூவர் வாழ்ந்த நாடாக இரான் கருதப்படுகிறது. இரானிய கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸை ஒட்டி டிசம்பர் 1ம் தேதி முதல், நோன்பு இருக்கின்றனர். இக்காலத்தில் அவர்கள் அசைவம் உண்பதில்லை. இது அவர்களால், 'சிறுநோன்பு' என அழைக்கப்படுகிறது. அதே போல, இயேசு உயிர்த்தெழும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு ஆறு வார காலம் இதே போல் கடைபிடிப்பதை அவர்கள் 'பெருநோன்பு' என்கின்றனர்.ஜன்னலில் மெழுகா 'ஜா'ப்பிடலாம் வாங்க!கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும்போது மெழுகுவர்த்திகள் ஏற்றி வைப்பதை ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக குறிப்பிடலாம்.கிறிஸ்துமஸ் தினத்தன்று விருந்தினர்களை அழைக்கும் ஒரு சின்னமாகவே மெழுகுவர்த்தி கருதப்படுகிறது.ஒருவரது வீட்டின் ஜன்னலில் மெழுகுவர்த்தி இருப்பதை பார்த்து அந்த வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை அறிந்து கொள்வர்.அன்று அந்த வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அந்த வீட்டினர் விருந்து அளிப்பர்.