உள்ளூர் செய்திகள்

முதலாளி!

பெரிய நிறுவனம் முன் இருந்தது அந்த சிறு கடை. அதில் சமோசா விற்றுக் கொண்டிருந்தார் பெரியவர். அந்த வட்டாரத்தில், அந்த கடை பிரபலம்.ஒரு நாள் -நிறுவன மேலாளர், கடைக்கு வந்தார்; தின்பண்டங்களை சாப்பிட்டபடியே, ''சிறப்பா நிர்வாகம் நடத்துறீங்க... தொழிலை நல்லப்படியா வளர்த்திருக்கீங்க; இதுவே, என்னை போல் பெரிய நிறுவனத்தில் வேலையில் இருந்திருந்தா இன்னும் முன்னேறிருக்கலாம்...'' என்றார்.புன்னகைத்த பெரியவர், ''இல்லை... உங்களை விட, நன்றாகவே முன்னேறி இருக்கிறேன்...'' என நம்பிக்கையுடன் சொன்னார்.''எப்படி...''''பத்து ஆண்டுக்கு முன், இந்த கடையை திறந்து தொழிலில் நுழைந்தேன். தனித்துவமான இந்த சமோசாவை விற்க துவங்கியபோது, நீங்க, இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க. அப்போ, என் வருமானம் மாதம், ஆயிரம் ரூபாய்; உங்க வருமானம், பத்தாயிரம். இப்போ, மேலாளர் ஆகிட்டீங்க... மாதம், லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குறீங்க...''எனக்கு, இந்த கடை சொந்தமாக இருக்கு; இந்த வட்டாரத்தில் நல்ல பேரும் இருக்கு; மாதம், லட்சம் ரூபாய் இல்லை... அதை விட, அதிகமாகவே சம்பாதிக்கிறேன். நாளை, என் வாரிசுகளும் இந்த தொழிலை தொடர முடியும்....''அவர்கள், என்னை போல, ஜீரோவில் துவங்க வேண்டாம்; நல்ல நிர்வாகியாக இருந்து இந்த வியாபாரத்தை வளர்த்தால் போதும். உங்களுக்கு அப்படியில்லை; உங்க பதவியை மகனுக்கு தர முடியாது; இத்தனை ஆண்டு கால உழைப்பின் பலன் முழுதும் உங்க முதலாளி மகனுக்கு தான் போகும்... ''உங்கள் மகன், மீண்டும் ஜீரோவில் துவங்கி, அத்தனை கஷ்டங்களையும் பட்டு முன்னேறணும்; அவன் மேலாளர் ஆகும் போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று கணக்கு போட்டுக்கோங்க...'' என்றார் பெரியவர்.சமோசாவுக்கு பணத்தை கொடுத்துட்டு, பதில் சொல்லாமல் ஓடி விட்டார் மேலாளர்.குழந்தைகளே... செய்யும் தொழிலே தெய்வம் என்பதை புரிந்து செயல்படுங்கள்.ஜெயகுமார் சரோஜா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !