பல் துலக்கும் முறை!
பல் துலக்குவது ஒரு நுட்ப முறை. பிரஷை நீட்டமாகப் பிடித்து, குறுக்காக பற்களைச் சுத்தம் செய்வர் பலர். அவ்வாறு துலக்கக் கூடாது. மேல்தாடைப் பற்களை தேய்க்கும் போது, மேலிருந்து கீழாகவும், கீழ்தாடைப் பற்களை, கீழிருந்து மேல் நோக்கியும் துலக்க வேண்டும். பற்களின் இடைப்பகுதியையும், பின் பகுதியையும் சுத்தம் செய்ய மறக்க கூடாது.பல் துலக்கும் போது, ஈறுகளை ஆள்காட்டி விரலால் மெதுவாக அழுத்தி, 'மசாஜ்' செய்து வந்தால் ரத்தக் கசிவு நிற்கும்.பச்சை நெல்லிக்காயை, பற்களால் கடித்து தின்றால் கறை நீங்கும்.கரும்பை சுவைத்தால், பற்கள் சுத்தமாகி பலம் பெறும்.ஆரஞ்சுப் பழத்தோலை உலர்த்தி, பொடி செய்து தேய்த்து வர பல் கறை நீங்கும்.எலுமிச்சைச் சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டால் பற்கள் பளிச் என மாறும்.உப்பையும், எலுமிச்சை சாறையும் சேர்த்து தேய்த்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறை மாறும்.