ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (21)
ஹாய்... ஹாய்... மாணவாஸ்... Are you ready to learn english? போனவாரம் கொடுத்த ஹோம் ஒர்க்ஸ் எல்லாம் செய்தீர்களா? குட்!அதன் தொடர்ச்சியைதான் இந்த வாரமும் சொல்லித் தரப்போறேன். சரியா? Weak verb பட்டியல் கொஞ்சம் தர்றேன். 98% வினைச் சொற்கள் இப்படித்தான் வரும்.Present tense - Past tense - Past participle Deceive ஏமாற்று - Deceived - DeceivedBath குளி - Bathed - BathedDamage சேதப்படுத்து - Damaged - DamagedBelieve நம்பு - Believed - BelievedDespatch அனுப்பு - Despatched - DespatchedObey கீழ்ப்படி - Obeyed - ObeyedBark குரை - Barked - BarkedInsist வற்புறுத்து - Insisted - InsistedStart புறப்படு - Started - StartedRequestவேண்டு - Requested - Requestedஅதேபோல, En என்று முடிகிற வினைச் சொற்களும், Ed என்று மாறும். உதாரணம்:Present tense - Past tense - Past participleWiden அகலப்படுத்து - Widened - WidenedLighten ஒளியேற்று - Lightened - LightenedRoughen கரடுமுரடாக்கு - Roughened - Roughenedஇதேபோல், Fy என முடிகிற சொற்களும் ied என்று முடியும்.Present tense - Past tense - Past participleTerrify பயமுறுத்து - Terrified - TerrifiedGlorify மேன்மைப்படுத்து - Glorified - GlorifiedClassify வகைப்படுத்து - Classified - Classifiedஅதேபோல், EN, EMல் தொடங்கும் சொற்களும் , ED என்று முடியும்.Present tense - Past tense - Past participleEnrage கோபமூட்டு - Enraged - EnragedEnjoy மகிழ்ச்சி கொள் - Enjoyed - EnjoyedEntitle பட்டம் சூட்டு - Entitled - Entitledசில சொற்கள் மூன்று நிலையிலும் மாற்றம் இல்லாமல் இருக்கும். அவற்றுள் சிலPresent tense - Past tense - Past participleThrust திணி - Thrust - ThrustSpread பரப்பு - Spread - SpreadShut மூடு - Shut - ShutHit மோது - Hit - HitCut வெட்டு - Cut - CutCast எறி - Cast - Cast Burst வெடி - Burst - BurstPut வை - Put - Putஇவற்றை வைத்து வாக்கியங்களை அமைத்துப் பழகுங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். அதுவரை...Until then bye, bye- Varshita.