உள்ளூர் செய்திகள்

மிளகாய் தலைநகரம்!

ஆந்திர மாநிலத்தில் உள்ளது, குண்டூர் நகரம். உலகளவில் மிளகாய் உற்பத்தியில் முக்கிய இடம் பிடித்துள்ளது. அதிக அளவில், மிளகாய் விளைவிக்கும் பகுதி என்பதால், 'இந்தியாவின் மிளகாய் தலைநகரம்' என்ற புகழுடன் திகழ்கிறது. இங்கு விளையும் மிளகாய் வகைகள், அவற்றின் காரத்தன்மை மற்றும் சிவப்பு நிறத்தால், உலக சந்தையில் தனித்துவ மதிப்பைப் பெற்றுள்ளது. குண்டூரில் அமைந்துள்ள மிளகாய் சந்தை, ஆசியாவிலே மிகப்பெரியது. உலக அளவில் முக்கிய மிளகாய் வர்த்தக மையமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல கோடி கிலோ மிளகாய், வாங்கி விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில், மிளகாய் விலையை நிர்ணயிக்கும் முக்கிய மையமாகவும் திகழ்கிறது. இங்கு விளையும், குண்டூர் சன்னம் போன்ற மிளகாய் வகைகள், அதிக காரத்தன்மை உடையன. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு, பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குண்டூர் பகுதியின் வெப்பமான காலநிலையும், மண் வளமும், மிளகாய் பயிரிடுவதற்கு ஏற்றதாக உள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ள மிளகாய் சிவப்புத் தங்கமாக விளங்குகிறது. - வி.திருமுகில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !