கறிவேப்பிலை தோசை!
தேவையான பொருட்கள்:இட்லி அரிசி - 250 கிராம்உளுந்து - 150 கிராம்கறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:இட்லி அரிசி, உளுந்தை மூன்று மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து மாவாக அரைக்கவும். கறிவேப்பிலையை சுத்தம் செய்து நைசாக அரைத்து மாவுடன் கலந்து புளிக்க வைக்கவும். மறுநாள், கல்லை சூடாக்கி எண்ணெய் தடவி தோசையாக வார்க்கவும். இரும்பு சத்து நிறைந்த, 'கறிவேப்பிலை தோசை' தயார். தொட்டுக்கொள்ள, பூண்டு மிளகாய் பொடி பொருத்தமாக இருக்கும். சுவைமிக்கது. அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.- வி.கமலா, புதுச்சேரி.தொடர்புக்கு: 91598 96695