குட்டீஸ் கார்னர்
* நியூயார்க் சட்டசபை உறுப்பினரான பெலிக்ஸ் ஆர்டிஷ் என்பவர், ஒரு ரெஸ்டாரன்ட் மீது உணவில் உப்பு அதிகமாக பயன்படுத்தியதற்காக ஆயிரம் டாலர் அபராதம் சுமத்தி விட்டார். காரணம், ஒரு கணக்கெடுப்பின் போது சுமார் 15 லட்சம் மக்கள் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று தெரிய வந்தது. ஆர்டிஷ் தன்னுடைய அபராதத்தால் ரெஸ்டாரென்ட் களில் உப்பு பயன் படுத்துவது குறையும் என்றும் உப்பினால்தான் ரத்த அழுத்த நோய் வருகிறது என்றும் நம்பினர்.* வால் நட்சத்திரம்!வால் நட்சத்திரங்களின் பாதையை முதலில் கண்டறிந்தவர் எட்மண்ட் ஹாலி. அவர் நியூட்டனின் நண்பர்; ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர். வால் நட்சத்திரங்களுக்கும் மற்ற கிரகங்களைப் போலவே சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கருத்தை கூறினார். அவர் பல கணக்கிடும் முறைகளை மேற்கொண்டார். 1531-ல் தோன்றிய ஒரு வால் நட்சத்திரம் 1607-ம் ஆண்டிலும் பிறகு 1682லும் மறுபடியும் தோன்றியதை அவர் கண்டறிந்தார். 75 அல்லது 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அதிசயம் நிகழ்வதை அவர் தெரிவித்தார். ஆனால், தன்னுடைய முன்னறிவிப்புக்கு தேவையான ஆதாரங்களை அவரால் வழங்க முடியவில்லை. அந்த வால் நட்சத்திரம் மீண்டும் திரும்புவதற்கு 16 ஆண்டுகள் முன்பாகவே அவர் இறந்து விட்டார். அவருடைய நினைவாக அந்த வால் நட்சத்திரம், 'ஹாலிவால் நட்சத்திரம்' என்றே அழைக்கப்படுகிறது.* உயிர் கொலைகள் ! சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஷென்சி பிராந்தியத்தில் தோன்றிய நிலநடுக்கம், 8.3 லட்சம் மக்களைக் கொன்று தீர்த்தது. இது நடந்தது 1556-ல். ஜப்பான் டோக்கியோ நகரத்தில் ஏற்பட்ட நில நடுக்கம், 1703-ல் இரண்டு லட்சம் மக்களை விழுங்கியது. 1923-ல் ஒரு லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரம் பேர். வெறும் 2 நிமிட பூகம்ப விளைவு. வங்காளத்தில் 1737-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், மூன்று லட்சம் மக்களைக் கபளீகரம் செய்தது. நிலத்துக்கடியில் பல மைல்கள் ஆழத்தில் உள்ள பாறைகள், இடப் பெயர்ச்சி அடைவதால் நில நடுக்கம் ஏற்படுகிறது. கடலோர நில நடுக்கத்தின் காரணமாகவே சுனாமி உண்டாகிறது. நிலநடுக்கத்தால் ஏற்படும் பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் அதிகம். இன்று நிலநடுக்கத்தை முன் கூட்டியே அறியுமளவு அறிவியல் முன்னேற்றம் கொண்டுள்ளது.அறிகுறிகள்:நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன் சில இடங்களில் தரை துருத்திப் புடைத்துக் கொள்ளும். பாறைகளில் பெரிய பிளவுகள் ஏற்படும். நீர்நிலைகளில் உள்ள நீர் தரைக்குள் சென்று மறைந்துவிடும் அல்லது எதிர்பாராத இடங்களில் இருந்து நீருற்றுகள் வெளிப்படும். சுற்றுச் சூழலில் ஏற்படும் மாற்றங்களை, நுண்ணிய அதிர்வுகளை உணரும் நுட்ப உணர்வு, நம்மைவிட பிராணிகளுக்கு அதிகம். பறவைகள் எளிதாய் உணர்ந்து சிறப்புச் சத்தங்களை எழுப்பும். நில நடுக்கம் என்பது பூமி தனது உட்பகுதிகளில் ஏற்றத்தாழ்வுகளைச் சரிப்படுத்திக் கொள்வதற்காக, தன்னைச் சோம்பல் முறித்துக் கொள்வதாகும்.