குட்டீஸ் கார்னர்!
* இங்கிலாந்து, பிரதமராக இருந்த, டிஸ்ரேலி தேர்தலின்போது, ஓட்டு கேட்க வீடு வீடாக சென்றார்.அவரை பிடிக்காத ஒருவர் வீட்டுக்கு சென்றார். தனக்கு ஓட்டுப்போடும்படி அவரிடம் கோரினார். அந்த மனிதர் கோபத்துடன், 'உமக்கு போடுவதை விட, பேய், பிசாசுகளுக்கு ஓட்டுப்போடுவேன்...' என்றார்.ஆத்திரப்படாமல் டிஸ்ரேலி, 'ஐயா, தேர்தலில் உங்கள் உற்றார் உறவினர்களுக்கே ஓட்டளிக்கும் பழக்கத்தை மாற்றி, இந்த முறை எனக்கு ஓட்டுப்போடுங்களேன்...' என்றார்.* இந்திய பிரதமாரக இருந்த நேரு, பிரிட்டனைச் சேர்ந்த பிரபல சிந்தனையாளரும், நோபல் பரிசு பெற்றவருமான பெட்ராண்டு ரசலை சந்தித்த போது, 'சைபர் நாட்டிலிருந்து வருகிற உங்களை நான் வரவேற்கிறேன்...' என்றார், ரசல்.ஒன்றுமில்லாத நாட்டிலிருந்து வருகிறவர் நீங்கள் என்று கூறுவது போல இருந்தது. நேரு ஒரு கணம் திகைத்தார். ரசல் விளக்கினார்.'கணித சாஸ்திரத்தில் பெரிய மேதைகளைப் பெற்ற நாடு உங்களுடையது. சைபர் என்ற எண்ணை கண்டுபிடித்து, உலகத்துக்கு கொடுத்ததே இந்தியா தான். அந்த பெருமையை நினைவுப்படுத்தும் வகையில் தான் அப்படிச் சொன்னேன்...' என்றார். இதைக் கேட்டதும் நேரு மிகவும் மகிழ்ந்தார்.* பிரபல இயற்பியல் விஞ்ஞானி, ஐன்ஸ்டினிடம் ஒரு பெண் ஒப்புமைத் தத்துவத்தை விளக்கும்படி கேட்டாள்.'நீங்கள் கணிதப் பேராசிரியரோடு, 10 நிமிடம் பேசிக் கொண்டிருந்தாலும், உங்களுக்கு ஒரு மணி நேரமாகத் தெரிகிறது.'நீங்களோ அழகான கவர்ச்சியான இளமை நிரம்பிய பெண். உங்களிடம் ஒரு மணி நேரமாக பேசிக் கொண்டிருக்கிறேன். அது எனக்கு பத்து நிமிடம் போலத்தான் தோன்றுகிறது. இதுதான் ஒப்புமைத் தத்துவத்தின் அடிப்படை...' என்றார்.