உள்ளூர் செய்திகள்

குட்டீஸ் கார்னர்!

தென் ஆப்ரிக்காவிலுள்ள அங்கோலா நாட்டின் ஜோகிம் என்ற பகுதியை சேர்ந்த, 'பிரான்ஸிஸ்கோ டோமின்கோ' என்பவருக்கு மிகப்பெரிய வாய். இவர் வாயில் ஒரு குளிர்பான பாட்டிலை கிடைமட்டமாக வைக்கலாம். 'உலகிலேயே மிகப்பெரிய வாய் கொண்டவர்!' என்று இவருடைய பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குட்டீஸ்...இப்படியும் ஒரு சாதனையா... முடியலடா சாமி!'சவுண்ட் ஆப் மியூசிக்' என்ற புகழ்பெற்ற திரைப்படம் தென் கொரியாவில் வெளியிடப்பட்ட போது பல திரையரங்குகளில் ஒரே நாளில் நான்கு அல்லது ஐந்து முறை திரையிடப்பட்டது. தைரியம் கொண்ட ஒரு திரைப்பட முதலாளி 'எக்ஸ்ட்ரா ÷ஷா' காட்டுவதற்காக திரைபடத்திலுள்ள எல்லா பாடல்களையும் 'கட்' செய்துவிட்டு வெறும் கதையை மட்டும் போட்டார் என்றால் பார்த்துக் கோங்களேன். அந்தப் படத்தில் நிமிஷத்திற்கு நிமிஷம் பாட்டு வரும். பாட்டு தானே படத்திற்கு புகழைத் தேடித்தந்தது.அமெரிக்காவில், 'கொலோராடோ' என்ற பகுதியை சேர்ந்த ஒருவர் தூக்கத்தில் நடக்கும் வியாதியால் பாதிக்கப்பட்டவர். இவர் தூக்கத்தில் நடந்தபடியே துப்பாக்கியால், தன்னையே சுட்டுக் கொண்டார். அதிர்ஷ்ட குண்டு அவர் கால் முட்டியில் பட்டதால் உயிர் தப்பினார்.அடப் பாவமே!கிறிஸ்டியன் வாலிச்ர் என்பவர் விலங்குகளுக்கு பயிற்சி அளிப்பவர். இவர் திருமணத்திற்கு மாப்பிள்ளை தோழனாக ஒரு புலியை வைத்திருந்தார். முன்பு ஒருமுறை இதே புலிதானே ஜெர்மனியில் இருந்த சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது இவரை தாக்கியதால் ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட இவர் ஒரு மாதம் கோமாவில் இருந்தார். அப்படி இருந்தும் அதே புலியை மாப்பிள்ளை தோழனாக நிற்க வைத்த இவரது புலிகள் பாசத்தை என்னவென்று சொல்வது?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !