உணவு விதிகள்!
உணவே, வாழ்வின் இனிமையை நிர்ணயிக்கிறது. உணவு தயாரிப்பில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை விதிகள் பற்றி பார்ப்போம்...* முழு தானியங்களையே பயன்படுத்த வேண்டும்* தீட்டப்படாத, கைக்குத்தல் அரிசி, கோதுமை, அவல் பயன்படுத்த வேண்டும்* மைதா நுாடுல்ஸ், பாஸ்தா, வெள்ளை பிரெட், பிஸ்கட், பரோட்டா போன்றவற்றை தவிர்க்கவும்* வாரம் இருமுறை கீரை சேர்த்துக் கொள்ளவும்* கறிவேப்பிலை பொடியை குழம்பிலும், சட்னி வகைகளிலும் கலந்து பயன்படுத்தவும்* பச்சை காய்கறிகளால் சாலட் செய்து உண்ணவும்* தினமும், மூன்று கப் பால் குடிக்கவும்* தயிர், மோர், பன்னீர் மற்றும் சீஸ் போன்றவற்றை எந்த வடிவிலும் பயன்படுத்தவும்* மொச்சை, காராமணி, பச்சை பயிறு, கொண்டைக் கடலை, பட்டாணி, பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ் என, பயிறு வகைகளை பயன்படுத்தவும்* ஒவ்வொரு மாதமும் சமையல் எண்ணெய் வகையை மாற்றி பயன்படுத்தவும்* தினமும், இரண்டு வகை பழங்கள் சாப்பிடலாம்* நிறைய தண்ணீர் அருந்தவும்; ரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லி தெளிக்காத உணவு பொருட்களையே பயன்படுத்தவும்.