டைனோ என் தோழன்! (19)
முன்கதை: அன்டார்டிகா உறைபனிக்குள் கிடந்த டைனோசர் உடல் துண்டில், டைனோ குட்டியை உருவாக்கிய விஞ்ஞானி யோகிபாபு, சிறுவன் சந்திரஜெயனுக்கு பரிசளித்தார். அதை பள்ளிக்கு எடுத்து செல்ல முயன்றான். இனி -''பள்ளியில எதாவது பிரச்னை பண்ணிட்டு வந்துராதடா...'' என எச்சரித்தார் அப்பா.''ஒரு பிரச்னையும் வராது...'' பள்ளி பேருந்தில் ஏறினான் சந்திரஜெயன்; அவன் கழுத்துக்கு பின், பையிலிருந்து எட்டி பார்த்தது டைனோ. அதைக் கண்டு மாணவ, மாணவியர் உற்சாக கூச்சல் எழுப்பினர்.சந்திரஜெயன் முதுகு பையிலிருந்த டைனோவை, எடுத்து வெளியே விட்டான் ஒருவன். 'டைனோ... டைனோ... நீ எங்க தோழன்... இவனும் தான்டா தங்கத்தமிழன்...'ராகத்துடன் பாட ஆரம்பித்தனர்.அந்த மெட்டுக்கு ஏற்ப ரகளையாய் ஆட ஆரம்பித்தது டைனோ.மாணவர்களின் கும்மாளத்தால் குலுங்கியது பள்ளி பேருந்து.பாட்டுக்கு ஏற்றவாறு தாளம் போட ஆரம்பித்தனர் மாணவ, மாணவியர்.பேருந்திலிருந்து இறங்கிய போது, டைனோவை மீண்டும் பைக்குள் போட்டான் சந்திரஜெயன்.வகுப்பறைக்குள் பிரவேசித்தார் ஆசிரியை.''காலை வணக்கம் மாணவர்களே...'''வணக்கம் மிஸ்...'''என் அருமை செல்வங்களே... இன்று டைனோசர் பற்றி பாடம் எடுக்கப் போறேன்...''''ஓஹோ...''உற்சாகமாக குரல் எழுப்பினான் சந்திரஜெயன்.''டைனோசர், ராட்சச பல்லி வகையை சேர்ந்தது; பசி வந்தால், தன் இனத்தையே சாப்பிடும். மனிதர்களையும் கொன்று விழுங்கும்; அந்த மிருகம் அழிந்து போய்விட்டது; அதற்காக மகிழ்ச்சியடைய வேண்டும்...''''டைனோசர் முழுசும் அழியல... ஒன்றிரண்டு உயிரோடு இருக்கு...'' ஒரு மாணவன் சொன்னான்.''நீ பாத்தியா...''''ஆமாம் மிஸ்... நீங்க பாடம் நடத்தற பாக்க, ஒரு டைனோசர் நம்ம வகுப்பறைக்கு வந்திருக்கு...''''என்னடா உளர்ற...''''சந்திரஜெயன் டைனோவை திறந்து விடு... மனிதர்களை விழுங்கும் மிருகத்தை மிஸ் பாக்கட்டும்...'' என்றான் அவன்.டைனோவை திறந்து விட்டான் சந்திரஜெயன்.வகுப்பாசிரியை நோக்கி அது ஓடியது.''கடவுளே... என்ன காப்பாத்து...'' அலறினார் ஆசிரியை.ஓடிச் சென்ற டைனோ, வகுப்பாசிரியையை அன்புடன் தழுவ முயன்றது.''ஐயோ... இது என் கழுத்தை கடிச்சிட போகுது; யாராவது பிடிங்க...''துள்ளி குதித்தபடி கத்தினார் ஆசிரியை.''ஒண்ணும் செய்யாது மிஸ்... அது குழந்தை மாதிரி; பிடிச்சு கொஞ்சுங்க...''டைனோவை தள்ளி விட்டார் வகுப்பாசிரியை; அது மீண்டும் ஓடி வந்து, அவரது கால்களை கட்டியது.''யாராவது இந்த பிசாசை பிடிங்கடா... இல்ல தலைமையாசிரியரிடம் சொல்லி, எல்லாரையும் வெளியே நிக்க வெச்சுடுவேன்...''டைனோவை பிடித்து செல்லமாக துாக்கினான் சந்திரஜெயன்.''இந்த குட்டி டைனோ மூஞ்சிய பாருங்க மிஸ்; இது, உங்களை கடிக்கும்ன்னு தோணுதா... இது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் இனத்திலிருந்து வந்தது தான்; ஆனால், அதே பண்புள்ள டைனோசர் அல்ல; பரம சாது...''வளர்ப்பு முயல் மாதிரி இது... ஒரு டைனோவை கொஞ்சுற அனுபவம் கிடைச்சுருக்குன்னா அதிஷ்டசாலி. சந்தேகமா இருந்தா உங்க கையை நீட்டுங்க; டைனோவை முத்தம் கொடுக்க சொல்றேன்...''''போன வாரம் உன்னை திட்டுனதுக்கு பழி வாங்குறியா சந்திரஜெயன்...''கோபத்துடன் வெடித்தார் ஆசிரியை.''என் மேல் நம்பிக்கை இருந்தா கை நீட்டுங்க மிஸ்...''சற்று யோசித்தபடி பயத்துடன் கையை நீட்டினார்.மென்மையாக முத்தம் தந்தது டைனோ; அதன் மீதிருந்த பயம் பாதி தெளிந்தது. டைனோவின் கண்களில் கருணையை கண்டார் வகுப்பாசிரியை. மனம் நெகிழ்ந்தது.''வாடா...'' என இரு கைவிரித்து வரவேற்றார்.பாய்ந்து வகுப்பாசிரியையின் நெஞ்சோடு ஒட்டியது டைனோ.''அச்சச்சோ... இதோட செய்கை ரெண்டு வயசு குழந்தை மாதிரில்ல இருக்கு...''வியப்புடன் கேட்டார் ஆசிரியை.''ஆமாம்... குழந்தை தான்; பாசத்தை கொட்டியபடி எதிர்பார்க்கும்... மிருகங்களை தொந்தரவு செய்யாமல் அன்பை கொட்டிப் பாருங்கள்; அவை, 10 மடங்கு திருப்பி தரும்...''வகுப்பாசிரியை, டைனோவை கொஞ்ச ஆரம்பித்தார்.''என் செல்லக்குட்டி... பொன்னுக்குட்டி... பட்டுக்குட்டி... தேன்குட்டி மியவ் குட்டி...'' பதிலுக்கு டைனோவும், ஒரு மாதிரி ஓசை எழுப்பியபடி கொஞ்சியது.''இதை நான் வெச்சிக்கவா...''''பிறந்த நாள் பரிசா, என் தாய்மாமா கொடுத்தார் மிஸ்...''''தினமும், டைனோவை வகுப்புக்கு எடுத்துட்டு வரலாம்; எனக்கு ஆட்சேபனையில்லை... யார்கிட்டேயும் இத பற்றி மூச்சு விட மாட்டேன்...''''சரிங்க மிஸ்...''''இப்ப பாடம் நடத்தவா...''டைனோவை, பையில் வைத்தான் சந்திரஜெயன்; வகுப்பாசிரியை மீண்டும் பாடம் நடத்த ஆரம்பித்தார்.வகுப்பு தோழன் ஒருவனுக்கு சந்திரஜெயனின் மீது பொறாமை உண்டு.'மிருகத்தை கொண்டுவந்து வகுப்புல ஷோவா காட்ற' என, எண்ணியபடி ஜாமமென்ட்ரி பாக்சிலிருந்த காம்பசால் டைனோவை குத்தினான் அவன்.பயங்கரமாக அலறியது டைனோ!- தொடரும்...வஹித்தா நாசர்