உள்ளூர் செய்திகள்

பேசாதே!

அரசர் ஏழாம் எட்வர்ட் பேரக் குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பேரன் ஆல்பர்ட், தாத்தாவிடம் ஏதோ பேச வாய் எடுத்தார். அதற்கு ஏழாம் எட்வர்ட்.''குழந்தாய்! சாப்பிடும் போது பேசுவது நல்ல பழக்கமல்ல; ஆகையால், நான் சாப்பிட்டு முடிக்கும்வரை பேசாதே,'' என்று அவன் வாயை அடக்கி விட்டார்.பிறகு எல்லாரும் சாப்பிட்டு முடிந்த பிறகு, எட்வர்ட் பேரன் ஆல்பர்ட்டை அழைத்து, ''நான் சாப்பிடும்போது ஏதோ சொல்ல வந்தாயே... அதை இப்போது சொல்,'' என்றார்.ஆல்பர்ட் முகத்தை மிக வருத்தத்துடன் வைத்துக்கொண்டு, ''இப்போது அதற்கு அவசியமில்லை,'' என்றான்.''ஏன்?'' என்று கேட்டார் சக்கரவர்த்தி.''தாங்கள் சாப்பிடும்போது உங்கள் சாப்பாட்டில் ஒரு பூச்சி இருந்தது. அதை நான் சொல்ல வந்தேன். ஆனால், தாங்கள் என்னை பேசக் கூடாது என்று தடுத்துவிட்டீர்கள்.''இப்போது அதைச் சொல்லி என்ன பயன். நீங்கள் தான் அதைச் சாப்பிட்டு விட்டீர்களே,'' என்றான் ஆல்பர்ட்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !