டாக்டர் ஜே.கே. ரெட்டி அங்கிள் சொல்றத கேளுங்க!
ஹையோ... அப்பா... வெயில் தாங்கல... கூல்ட்ரிங்ஸ் வேணும்; சாப்பாடு வேணாம்... 'ஏ.ஸி' ரூம் மட்டும் போதும் என குட்டீஸ் முதல் பெரியவர் வரை சொல்கிறோம்.கோடைக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு என்னென்ன நோய்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறார் குழந்தைகள் நல நிபுணர் ஜெ.கே.ரெட்டி, அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனை.சன் ஸ்ட்ரோக்!கடும் வெயிலினால் எற்படும் மயக்கத்தையே, 'சன் ஸ்ட்ரோக்' என்கிறோம். 'சன் ஸ்ட்ரோக்' வந்தால் உடனடியாக மூளை பாதிக்கப்படும் அல்லது மரணம் ஏற்படும். வெயிலில் குழந்தைகள் விளையாடுவதால் ஏற்படுகிறது. பெரியவர்கள் வெயிலில் வேலை செய்வது, வெயிலில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவது, இதய நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் குறிப்பாக, பீட்டா ப்ளாக்கர்ஸ், டையோரிட்டிக்ஸ் போன்றோருக்கு வரும். உடலிலுள்ள நீர் வற்றுவதால் திசுக்கள் பாதிப்படைந்து மூளையும் செயலிழந்து போகும். குமட்டல், மயக்கம், உடல் உஷ்ணம், பேச்சு குழறுவது போன்றவையே இதன் அறிகுறிகள். இதற்கு சிகிச்சையை விட முதலுதவியே முதலில் அவசியம். இறுக்கமான உடை அணிந்திருந்தால் தளர்த்தி, காற்று படும்படி நோயாளியை படுக்க வைக்க வேண்டும். குளிர்ந்த நீரில் துணியை நனைத்து தலை, அக்குள், மார்பு, தொடை போன்ற இடங்களில் போட வேண்டும். அப்புறம், டாக்டரிடம் செல்வதே நலம்.கண் வலி (மெட்ராஸ் ஐ)!லீவு விட்டாச்சு என்பதால் தொடர்ந்து, 'டிவி', கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது சரியான டைம்க்கு சாப்பிடாமல் இருப்பது, கிருமித் தொற்று ஆகியவற்றால் 'மெட்ராஸ் ஐ' வருகிறது. ஒருவித வைரஸ் கிருமியால் இந்நோய் ஏற்படும். கண்நோய் ஏற்பட்டவர்கள், அடிக்கடி சுத்தமான நீரில் கண்களைக் கழுவ மட்டும் வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை கண்ணில் விட்டு சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். கண் நோய் வந்தவர்களுக்கு கண்ணில் அழுத்தம் ஏற்பட்டு தலைவலி உண்டாகும். இந்த சமயத்தில் கண்களை கசக்குவது கூடாது. இதனால் கண்களின் பாகங்களாகிய கருவிழி, வெண்ணிறமாகிய ஸ்கிலீரா, கண்ணில் உள்ள ஆடி, விழித்திரையில் பாதிப்பு ஆகியவை ஏற்படும்.கண்ணில் கட்டிசம்மரில் கண் இமைப் பகுதியில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் அடைப்புகளின் காரணமாக இமைகளில் கட்டி உருவாகிறது. திரவங்கள் தேங்கி, கிருமிகள் தாக்கி இப்பகுதியில் சீழ் பிடிக்கிறது. கண்களைப் பொறுத்தவரை எந்தப் பிரச்னையாக இருந்தாலும் டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வலி இருப்பின் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். சரியா?பெரியம்மை'வேரிசெல்லா வைரஸ்' என்ற கிருமி இந்நோயை பரப்புகிறது. எளிதில் தொற்றக்கூடியது. திடீரென காய்ச்சல் அடிக்கும்; காய்ச்சலுடன் மூக்கிலிருந்து நீர் வடிதல், தும்மல், கை, கால் மூட்டு வலி; வாந்தி, கண்கள் சிவந்திருத்தல் போன்றவை இதன் அறிகுறிகள்.தட்டம்மை (மணல்வாரி )'மீஸல்ஸ்,' 'ரூபெலா வைரஸ்' அல்லது ஆர்.என்.ஏ. வைரஸ் கிருமியால் வருவது. அதிவேகமாகப் பரவக்கூடியது; தொற்றக்கூடியது. மூக்கிலிருந்து சீழ் வடிதல், தும்மல், இருமல், கண்கள் சிவந்திருத்தல், கண் எரிச்சல் உண்டாகி காய்ச்சல் வந்து, செம்மண் நிறத்தில் சிறு சிறு பருக்கள் காதின் பின்புறம், கழுத்தின் பக்கவாட்டுப் பகுதி, முகத்திலும் தோன்றி, பின் உடல் முழுவதும் பரவக்கூடியது.சின்னம்மை'வேரிசெல்லா ஜூஸ்டர்' எனும் வைரஸ் கிருமியால் ஏற்படுவது. பெரியம்மையைப் போலவே இதுவும் தொற்றி, பரவக் கூடியது; இந்நோயானது விளையாட்டு பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு வருவதால் இதை, 'விளையாட்டம்மை' என்றும் அழைப்பர்.பொன்னுக்கு வீங்கி!'பாராமிக்ஸோ வைரஸ்' கிருமியால் உண்டாகக் கூடியது. தாடையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள, 'பரோடிட் கிளான்சில்' தொற்று உண்டாகி வீக்கம் ஏற்பட்டு, வலி ஏற்படுத்தக்கூடிய நோய் இது. இந்நோயில் தாடையின் கீழ் வீங்குவதால் இதை, 'பொன்னுக்கு வீங்கி' என்பர்.நீர்க் கடுப்பு, நீர் எரிச்சல்வெயிலில் வெகுநேரம் இருப்பது... கொஞ்சமாக தண்ணீர் குடிப்பது, சிறுநீரை அடக்குவது, காரவகை உணவு, எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிடுவது போன்ற பல்வேறு காரணங்களால் நீர்க் கடுப்பு, நீர் எரிச்சல் ஏற்படும்.அதிக வியர்வைநுரையீரல் பாதிப்பு, இதய பாதிப்பு, சர்க்கரை அளவு குறைதல், ரத்தஅழுத்தம் குறைதல், மாரடைப்பின் முன்குறி, பயம் போன்றவற்றால் அதிக வியர்வை ஏற்படும்.மஞ்சள் காமாலைஅசுத்தமான குடிநீரைக் குடிப்பது, சுகாதாரமற்ற, சரியாக வேகாத உணவை உட்கொள்வது, தரமற்ற குளிர்பானங்கள், மது, புகையிலையை அதிகமாகப் பயன்படுத்துவது, வைரஸ் தொற்றுக் கிருமிகள், கலப்பட உணவு - திண்பண்டங்களை உண்பது இப்படி எல்லாம் செய்தால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலை வரலாம்.வாய்ப் புண், வயிற்றுப் புண்மிகவும் சூடாக சாப்பிடுவது, சாப்பிடாமல் பட்டினி இருப்பது, நேரம் தவறிச் சாப்படுவது, நோய்த்தொற்றுக் கிருமிகளாலும், சத்துக் குறைபாடு, மருந்துகளின் ஒவ்வாமை, நீண்ட நாட்கள் மருந்து சாப்பிடுவது, தீராத மலச்சிக்கல், போன்றவற்றால் இவை வரும்.அய்யோடா சாமி என இருக்கா? சரி... சரி... இவை எல்லாம் வராமல் இருக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?மேற்கண்ட நோய்கள் கோடைக் காலத்தில் ஏற்பட வாய்ப்புண்டு. இவை வராமலும், வந்தபின் தீர்க்கவும் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றினால், கோடை வெயிலுக்கு அஞ்ச வேண்டியதில்லை:காலை எழுந்தவுடன், 200 மி.லி., குளிர்ந்த நீரைக் குடிக்க வேண்டும். இளநீர், தர்பூசணி, திராட்சை, வெள்ளரி, நுங்கு சாப்பிடலாம். காலை, இரவு இரு வேளைகளிலும் குளிக்கவும். டைப்பாய்டு, அம்மை நோய்கள், மஞ்சள்காமாலை போன்றவற்றிற்கு தேவையான தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். அவ்ளோதான்! டாக்டர் ரெட்டி அங்கிள் சொல்வதை, 'பாலோ' பண்ணுங்க... 'ஹெல்த்தி'யா வாழுங்க!