சுண்டை வற்றல் பொடி!
தேவையான பொருட்கள்:சுண்டை வற்றல் - 1 கப்காய்ந்த மிளகாய் - 5உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை பயிறு - சிறிதளவுஉப்பு, புளி, நெய் - தேவையான அளவு.செய்முறை:வாணலியில், நெய் சூடானதும், சுண்டைக்காயை வறுக்கவும். பின், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை பயிறு, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.இவற்றுடன், புளி, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். சத்துமிக்க 'சுண்டை வற்றல் பொடி!' தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி, தோசையுடனும் தொட்டுக்கொள்ளலாம்.- வி.விஜி, சென்னை.தொடர்புக்கு: 99520 71794