உள்ளூர் செய்திகள்

வற்றல் பொடி!

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி வற்றல் - 0.5 கப்சுண்டை வற்றல் - 0.5 கப்உலர்ந்த வேப்பம் பூ - 0.5 கப்சுக்குப்பொடி - 1 தேக்கரண்டிபெருங்காயம், சீரகம், மிளகு, உப்பு - தேவையான அளவுநல்லெண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

வாணலியில், நல்லெண்ணெய் சூடானதும், மணத்தக்காளி வற்றல், சுண்டை வற்றல், உலர்ந்த வேப்பம் பூ, சுக்குபொடி, சீரகம், மிளகை தனித்தனியாக வறுக்கவும். சூடு ஆறியதும், பெருங்காயம், உப்பு சேர்த்து பொடிக்கவும். சுவை மிக்க, 'வற்றல் பொடி' தயார். சுடு சாதத்தில் நல்லெண்ணெயுடன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். வயிற்று வலி, பித்தம், வாய்வு தொல்லையை விரட்டும். அனைத்து வயதினரும் விரும்புவர்!- எஸ்.ராஜம், திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !