உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

பொங்கலுக்கு குறிப்பிட்ட அளவுகளில் தானியங்களை பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. இந்த விகிதாசாரப்படி தயாரிக்கப்படும் பொங்கலை 'முனையகரன் பொங்கல்' என்று அழைப்பர்.முனையகரன் என்ற அரசன்தான் இந்த விகிதாசாரத்தை அறிமுகப்படுத்தியவன் என்று சொல்வார்கள். அதனால்தான் அந்த பெயர். ஐந்து பங்கு அரிசி, மூன்று பங்கு பருப்பு, இரண்டு பங்கு நெய் என்ற அளவில் பொங்கலிட்டு, சூரியனுக்கு அர்ப்பணித்து அவரை மகிழ்வித்தானாம் அந்த அரசன்.இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. ஐந்து பங்கு அரிசியை ஐம்புலன் களாகவும், மூன்று பங்கு பருப்பை தீமைகளாகவும், இரண்டு பங்கு நெய்யை இரண்டு வித அகங்காரங்களாகவும் கொண்டு இவற்றை சூரியனுக்கு படைப்பதன் மூலம் நம் உள்ளத்தில் எந்த மாசும் படராமல் வாழ முடியும் என்று நம்பினான் அந்த அரசன். அவனுடைய அந்த பக்குவ நிலையை சூரியன் பாராட்டி, அவனுக்கு அருள் செய்தாராம்.பொங்கல் பானையை கிழக்கு பக்கமாக வைத்து, அதில் கிழங்குகளுடன் கூடிய மஞ்சள் இலை, இஞ்சி இலை, ஆகியவற்றை கட்டி வைக்க வேண்டும். பொங்கல் பானையில் ஈரப்படுத்தப்பட்ட அரிசி மாவினால் சூரிய சந்திர வடிவங் களை வரைந்து கொள்ள வேண்டும். அந்த பொங்கல் பானை வைக்கும் அடுப்பை கூட சிலர் புதியதாக வாங்கி வைப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !