தெரிங்சுக்கோங்க!
* எலுமிச்சம் பழத்தை, ஒரு நாளைக்கு, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துவிட்டால் கெடாது* தேங்காய் மூடியைத் தண்ணீரில் போட்டு வைத்தால், இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை கெடாது; தினமும் நீரை மாற்ற வேண்டும்* இஞ்சியை ஈரத்துணியால் சுற்றி தண்ணீர் குடத்தின் மேல் வைத்தால், 10 நாட்கள் வரை புதிதாகவே இருக்கும்* பச்சை மிளகாய், ஒரு வாரம் வரை கெட்டு போகாமல் இருக்க, அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, சிறிதளவு மஞ்சள் பொடியும் சேர்த்து காற்று புகாமல் இறுக்கி மூடி வைக்கவும்* வாடிப்போன கொத்தமல்லி தழையை, வெதுவெதுப்பான நீரில்போட்டு எடுத்தால், பச்சை பசேல் என்று ஆகிவிடும்* வெங்காயத்தை நைலான் நுாலால் பின்னப்பட்ட பையில் போட்டு, காற்றோட்டமாக கட்டி தொங்க விட்டால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்* வாழைக்காய்யை தண்ணீரிலேயே போட்டு வைத்தால், நாலைந்து நாட்களுக்கு பழுத்து போகாது.