உள்ளூர் செய்திகள்

ஐநூறு ரூபாய்!

பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் சங்கீதா. தற்செயலாகப் பார்த்தாள். பீரோவின் அருகே ஐநூறு ரூபாய் பணம் கிடந்தது. அம்மா அடுக்களைக் குள் இருந்தாள்.சங்கீதா விரைந்து சென்று அந்தப் பணத்தை எடுத்து தன் பள்ளிப் பைக்குள் மறைத்து வைத்துக் கொண்டாள்.''அம்மா நான் வர்றேம்மா,'' என்று குரல் கொடுத்து விட்டு தெருவில் இறங்கி நடந்தாள்.சாலையை அடைந்தாள். பவித்ரா தயாராய் நின்றாள். சங்கீதா உற்சாகமாக கேட்டாள்.''பவித்ரா.. ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?''''என்னடி திடீர்னு ஐஸ்கிரீம் ஆசை?''''இங்கே பாரு... உனக்கு ஐம்பது ரூபாய் ஐஸ்கிரீம் வேணுமா... நூறு ரூபாய் ஐஸ்கிரீம் வேணுமா... எது வேணும்னாலும் கேளு... நான் வாங்கித் தர்றேன்...'' என்றாள் சங்கீதா.''என்ன சங்கீதா ரொம்பவும் தாராளமாயிருக்கே?''சங்கீதா தன் பள்ளிப்பையில் இருந்த ஐநூறு ரூபாய் பணத்தை எடுத்துக் காண்பித்தாள்.''ஏதுடி இந்தப் பணம்?'' என்று பவித்ரா கேட்டாள்.''அதெல்லாம் கேட்காதே... உனக்கு ஐஸ்கிரீம் வேணுமா வேண்டாமா... அதை மட்டும் சொல்லு!''''இங்க பாரு... நீ உண்மையைச் சொல்லாட்டினா நான் உன் கூட பேச மாட்டேன்!''''கீழே கிடந்ததுன்னு வச்சுக்கயேன்!''''இல்ல நான் நம்ப மாட்டேன்!''உண்மையைச் சொன்னாள் சங்கீதா. பவித்ரா கோபமானாள்.''சொந்த வீட்டுலேயே திருட்டா?'' என்று கேட்டாள்.''நான் திருடலை... கீழே கிடந்ததைத்தானே எடுத்தேன். பிறகு எப்படி திருட்டாகும்!'' என்றாள் சங்கீதா.''பணத்தை அம்மாகிட்ட கொடுத்திருந்தா அது திருட்டு இல்லை. நீ மறைக்க நினைச்சியே அப்பவே அது திருட்டுதான்...'' கோபமாக சொன்னாள் பவித்ரா.சங்கீதா தலை கவிழ்ந்து கொண்டாள்.பள்ளியில், முதல் வகுப்பு முடிந்து கிளம்பிய ஆசிரியை தன் பணப்பையை பார்த்து விட்டு, 'ஆவ்' என்று அலறினார்.அவர் பையில் இருந்த ஐநூறு ரூபாய் பணத்தைக் காணவில்லை என்றார்.மாணவிகளிடம் கேட்டு பார்த்தார். சரியான பதில் இல்லை. எல்லா மாணவிகளின் பையையும் சோதனையிட்டார். சங்கீதாவின் பையிலிருந்து ஐநூறு ரூபாய் பணத்தை எடுத்தார்.''மேடம்... இது என்னோட பணம்,'' என்றாள் சங்கீதா.ஆசிரியை நம்பவில்லை. அவளைத் தண்டிக்க முயன்றார்.பவித்ரா எழுந்தாள்.''மேடம்... சங்கீதா சொல்றது உண்மைதான். அது அவளோட பணம்தான். காலையிலேயே நான் பார்த்தேன்,'' என்றாள்.ஆசிரியை பணத்தை சங்கீதாவிடம் திருப்பிக் கொடுத்தார்.பள்ளி இடைவேளையின் போது, ''சங்கீதா பார்த்தியா... நீ செஞ்ச திருட்டை யாருமே பார்க்கலைன்னு நினைச்சே. கடவுள் பார்த்திருக் கார் பார்த்தியா. வீட்டுக்குப் போனதும் பணத்தை அம்மா கிட்ட கொடு,'' என்றாள் பவித்ரா.''பவித்ரா என்னை மன்னித்து விடு... இனி மேல் இந்த மாதிரி தவறை செய்ய மாட்டேன்,'' என்றாள் சங்கீதா.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !