பரிசு!
கடந்த, 1953ல், ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலை பள்ளியில், 11ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அந்த ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், தமிழில், அதிக மதிப்பெண் பெற்று பள்ளியின் முதல் மாணவனாக தேறினேன். அதை பாராட்டும் வகையில், பள்ளி ஆண்டு விழாவில், எனக்கு ஒரு ஆங்கில புத்தகம் பரிசாக வழங்கினர்.அது, ஷேக்ஸ்பியரின், 'தி ரிச்சர்ட் ௨' புத்தகம். பள்ளி முடித்து, கல்லுாரியில், 'இன்டர் மீடியட்' வகுப்பில் சேர்ந்தேன். அந்த வகுப்பில், ஷேக்ஸ்பியரின், 'தி ரிச்சர்ட் ௨' பாடமாக வைக்கப்பட்டிருந்தது.என் பள்ளி ஆசிரியர், கல்லுாரி படிப்புக்கு தேவையான புத்தகத்தை தேர்ந்தெடுத்து பரிசாக வழங்கியதை நினைத்து மிகவும் மகிழ்ந்தேன்.இதே போல், பள்ளியில், மாணவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் அளிக்கும் போது, அவை, அவர்கள் கல்லுாரி படிப்பிற்கு உபயோகமுள்ளதாக இருந்தால், மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது, என் கருத்து. செய்வீர்களா...- சி.ராஜகோபாலன், தி.நகர்.