உள்ளூர் செய்திகள்

பொன் அழகி!

பொன் அழகி அடைப்பட்டு கிடந்த அறையில் ஒரே ஒரு ஜன்னல் மட்டும்தான் இருந்தது. பொன் அழகியை வெளி உலகத் தவர்கள் யாருமே நெருங்க முடியாது. மந்திரக்கார கிழவி தன் மந்திர சக்தியால் பொன் அழகி தலையில் மிக மிக நீளமான பொன் நிறத்தில் முடி வளரும்படி செய்தாள்.தினமும் மந்திரக்கார கிழவி யாருக்கும் தெரியாமல் உணவு தயாரித்து, அதை பொன் அழகி அடைப்பட்டு கிடக்கும் அரண்மனைக்கு கொண்டு வருவாள். கோட்டைக்கு கீழ் இருந்து மந்திரக்கார கிழவி, ''பொன் அழகி, பொன் அழகி'' என்று இரண்டு முறை கூப்பிடுவாள்.குரல் கேட்டதும், பொன் அழகி தன் நீளமான பொன்நிற கூந்தலை தான் அடைப் பட்டு கிடக்கும் அறையில் உள்ள ஜன்னல் வழியே கீழே விடுவாள். மந்திரக்கார கிழவியும் தான் கொண்டு வந்த உணவோடு, பொன்நிற கூந்தலை பிடித்து ஏறியபடி பொன் அழகி அடைப்பட்டு கிடக்கும் அறைக்கு சென்று, அவளுக்கு உணவு கொடுத்து விட்டு திரும்புவாள்.மந்திரக்கார கிழவி பொன் அழகிக்கு உணவு அளித்து வருவது நீண்ட நாட்களாக யாருக்கும் தெரியாமல் ரகசிய மாகவே இருந்தது.ஒருநாள் காட்டில் வேட்டையாட வந்த அரசகுமாரன் ஒருவன், மந்திரக்கார கிழவி, பொன் அழகியின் பெயரை கூவி அழைத்ததும் உயரமான கோபுரத்தில் இருந்து நீளமான பொன்நிற கூந்தல் கீழே வந்ததையும், அந்த கூந்தலை பிடித்துக் கொண்டு மந்திரக்கார கிழவி மேலே ஏறி இறங்கியதையும் பார்த்தான்.மறுநாள் அரசகுமாரன் தான் பார்த்த கோபுரத்துக்கு சற்று தூரத்தில் நின்றுக் கொண்டு மந்திரக்கார கிழவி வந்து போகும் நேரத்தை கவனித்தான். இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு மந்திரக்கார கிழவி கோபுரத்துக்கு வந்து, சென்ற பிறகு அரச குமாரன் மறுநாள் தான் பார்த்த கோபுரத்துக்கு சற்று தூரத்தில் நின்றுக் கொண்டு, ''பொன் அழகி, பொன் அழகி!'' என்று மந்திரக்கார கிழவி அழைப்பது போல் குரல் கொடுத்தான்.தன் பெயர் சொல்லி அழைக்கும் குரலை கேட்ட பொன் அழகி, ஜன்னல் வழியே நீளமான பொன்நிற கூந்தலை தொங்கவிட்டாள். அரச குமாரனும் பொன்நிற கூந்தலை பிடித்துக் கொண்டு கோபுரத்துக்கு சென்றான். கோபுரத்து ஜன்னல் வழியே உள்ளே சென்றவன் அங்கே ஒரு அழகிய இளவரசி போன்ற தோற்றத்தில் இருந்த ஒரு பெண்ணை பார்த்தான்.கோபுரத்து அறையில் அடைப்பட்டு கிடந்த பொன் அழகி இளமையும், அழகும் நிறைந்த அரச குமாரனை பார்த்து அதிர்ச்சி யும், ஆச்சரியமும் அடைந்தாள். பொன் அழகி அவள் பிறந்ததில் இருந்து மந்திரக்கார கிழவியை தவிர, வேறு யாரையும் பார்த்திராததால் அரச குமாரனை பார்த்ததும் அவள் தன்னை மறந்து, தன் எதிரில் நிற்கும் ஆடவனை பார்த்து, ''நீங்கள் யார்?'' என்று மிகவும் அன்பான வார்த்தைகளால் கேட்டாள்.''தான் பக்கத்து நாட்டு அரசகுமாரன் என்று கூறினான். பிறகு அரசகுமாரன் பொன் அழகியை பார்த்து தன்னை மணந்துக் கொள்ள சம்மதமா?'' என்று கேட்டான்.பொன் அழகியும் சற்றும் தாமதிக்காமல் அரசகுமாரனை மணந்துக் கொள்ள சம்மதித்தாள்.பொன் அழகி தன்னை காண வந்த அரச குமாரனை பார்த்து, ''அடுத்த முறை வரும் போது, நாம் இருவரும் இங்கிருந்து தப்பிச் செல்ல ஒரு பலம் வாய்ந்த நீளமான கயிறு தேவை. அதனால் பட்டு நூல் நிறைய கொண்டு வாருங்கள்,'' என்று கூறினாள்.அரச குமாரனும், பட்டு நூல் நிறைய கொண்டு வருவதாக பொன் அழகியிடம் கூறி விடைப் பெற்றுச் சென்றான்.அரசகுமாரன் பொன் அழகியை சந்தித்து சென்ற பிறகு, பொன் அழகி மிகவும் மகிழ்ச்சியோடு காணப்பட்டாள். பொன் அழகி மகிழ்ச்சியோடு இருப்பதை கண்டு சந்தேகம் கொண்டு மந்திரக்கார கிழவி பொன் அழகியை யாருக்கும் தெரியாமல் தூக்கிச் சென்று அடர்ந்த காட்டில் யாரும் அணுக முடியாத இடத்தில் சிறை வைத்தாள்.நூழக்கம்போல் இளவரசன் பொன் அழகியை காண கோபுரத்துக்கு கீழே நின்று குரல் கொடுத்தான். அரச குமாரன் குரலை கேட்ட மந்திரக்கார கிழவி பொன் அழகி பொன்நிற கூந்தலை கீழே இறக்கி விடுவது போல் இறக்கி விட்டாள். அரசகுமாரனும், ஆவலோடு பொன்நிற கூந்தலை பிடித்தபடி கோபுரத்தை நோக்கி சென்றான். பாதி தூரம் சென்ற அரசகுமாரனை பார்த்து கோபுரத்து ஜன்னல் அருகே வந்த மந்திரக்கார கிழவி காடே அதிரும்படி சிரித்தாள்.உடனே அவள் ஒரு கோடாலியை எடுத்து வந்து பொன் நிற கூந்தலை பிடித்தபடி பாதி தூரத்தில் வந்துக் கொண்டிருந்த அரச குமாரனை பார்த்து, 'இன்றோடு நீ ஒழிந்து போ' என்று கத்தியபடி கூந்தலை ஒரே வெட்டில் வெட்டி விட்டாள். பொன்நிற கூந்தலை பிடித்திருந்த அரச குமாரன் தடால் என்ற சப்தத்துடன் ஒரு முட்புதரில் விழுந்து விட்டான். முட்புதரில் இருந்த சில கூர்மை யான முட்கள் அரசகுமாரனின் கண்களில் பட்டு கண்களை குருடாக்கி விட்டன. தன் கண்கள் குருடானதை உணர்ந்த அரச குமாரன் வேதனை அடைந்ததோடு, இனி பொன் அழகியை எப்படி பார்ப்பது என்று கவலைப்பட்டான்.குருடான கண்களோடு காட்டில் திரிந்துக் கொண்டிருந்த அரச குமாரன் என்ன செய்வது எங்கே செல்வது என்று புரியாமல் சில ஆண்டுகளை கடத்தி விட்டான்.ஒருநாள் தன் விதியை எண்ணி காட்டில் நடந்து சென்ற அரசகுமாரன் காதுகளில் ஓர் இனிமையான இசையோடு சோகமான பாட்டு ஒன்று கேட்டது. பாட்டு வந்த திசையை நோக்கிச் சென்ற அரசகுமாரன் பாட்டு மிக தெளிவாக கேட்கும் இடத்துக்கு அருகில் வந்து சோகமான பாட்டை பாடும் குரலை தெரிந்துக் கொண்டான். அந்த பாடலை பாடுவது பொன் அழகி என்று தெரிந்துக் கொண்டு,'' பொன் அழகி! பொன் அழகி!'' என்று உரத்த குரலில் அழைத்தவாரே சென்றான். தன்னை அழைத்த குரல் தன்னை நேசிக்கும் அரசகுமாரனுடையது என்று புரிந்துக் கொண்ட பொன் அழகி, குரல் வந்த திசை நோக்கி வந்தாள். வந்தவள் தன் அருகே தான் விரும்பும் அரச குமாரன் நிற்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள். பொன் அழகி அரச குமாரனை அழைக்கவும், அந்த நேரத்தில் கண் பார்வையில்லாத அரச குமாரன் கீழே கிடந்த கல்லை கவனிக்காமல் தடுக்கி விழுந்து விட்டான். கீழே விழுந்த அரசகுமாரனை தன் இரு கரங்களால் தூக்கி விடும் போது, பொன் அழகியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.அந்தக் கண்ணீர் அரசகுமாரனின் கண்களில் பட்டு அரசகுமாரன் கண்பார்வை பெற்றான். சற்றும் தாமதிக்காமல், பொன் அழகியை அழைத்துக் கொண்டு தன் நாடு சென்றான். தான் அடைத்து வைத்த இடத்தில் இருந்து காணாமல் போன பொன் அழகியை தேடி அலைந்த மந்திரக்கார கிழவி, காட்டில் திரிந்துக் கொண்டிருந்த கொடிய மிருகம் ஒன்றிற்கு ஒருநாள் பலியாகி விட்டாள். நீண்டகாலமாக தன் மகனை காணாமல் தவித்த அரசகுமாரனின் தாயும், தந்தையும் மகிழ்ச்சி அடைந்தனர். அரசகுமாரன் தான் காணாமல் போன நாட்களில் நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் தன் தாய், தந்தையிடம் கூறினான். முதல் சந்திப்பிலேயே தன் மனதை பரிகொடுத்த பொன் அழகியை மணக்க சம்மதம் அளிக்குமாறு கேட்டான்.அரசகுமாரனின் தாயும், தந்தையும் பொன்அழகியின் அழகையும், அடக்கத் தையும் கண்டு மகிழ்ச்சி அடைந்து, அவளை மணந்துக் கொள்ள முழு சம்மதத்தை அளித்தனர். ஒரு நல்ல நாளில் நாட்டு மக்கள் கூடி வாழ்த்த அரச குமாரனுக்கும், பொன் அழகிக்கும் விமரிசையாக திருமணம் நடந்தது.பொன் அழகியின் விருப்பப்படி அரச குமாரன் பொன் அழகியின் தாய், தந்தையை தேடி கண்டுபிடித்து, அரண் மனைக்கு அழைத்து வந்து அவர்களை தன் அரண்மனையிலேயே தங்க வைத்து சகல வசதிகளையும் செய்து கொடுத்தான்.பொன் அழகியும் அரசகுமாரனும், நாட்டு மக்களுக்கு பல நன்மைகள் செய்து பல ஆண்டுகள், நாட்டை சீறும், சிறப்புமாக ஆண்டு வந்தனர்.முற்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !