உள்ளூர் செய்திகள்

வெட்டுக்கிளி!

வெட்டுக்கிளி, கணுக்காலி உயிரினத் தொகுதியைச் சேர்ந்த பூச்சியினம். வெளித் தோற்றத்தில் தத்துக்கிளி போலிருக்கும். பல நிறங்களில் உள்ளன. பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதால், இது உழவர்களின் எதிரி என அழைக்கப்படுகிறது.வெட்டுக்கிளி, இரண்டு மாதங்களில், ஆறு முறை தோலுரிக்கும்; இவற்றின் காதுகள் வயிற்றிலோ அல்லது முன் கால்களின் நுனியிலோ காணப்படும். மணிக்கு, ஆறு கி.மீ., வேகத்தில் பறக்கும் திறன் உடையது. புரதச்சத்து நிறைந்திருப்பதால், சில நாட்டு மக்கள், இதை உணவாக உட்கொள்கின்றனர். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், வெட்டுக்கிளியில் வித விதமாய் உணவு சமைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !