மூலிகைத் தொக்கு!
தேவையான பொருட்கள்:வெற்றிலை - 2கற்பூரவல்லி இலை - 2எலுமிச்சை இலை - 2துளசி, சித்தரத்தை இலை - 0.25 கப்எலுமிச்சை பழச்சாறு - 2 தேக்கரண்டிசுக்குப் பொடி, மிளகுத்துாள், சீரகத்துாள், மஞ்சள் துாள், மல்லித்துாள் - தலா 1 தேக்கரண்டிசீரகம், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:வெற்றிலை, கற்பூரவல்லி, எலுமிச்சை, துளசி, சித்தரத்தை இலைகளை சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில், நல்லெண்ணெய் சூடானதும், சீரகம் தாளித்து, அரைத்த விழுதை போட்டு வதக்கவும். பின், சுக்குப் பொடி, மிளகுத்துாள், சீரகத்துாள், மஞ்சள் துாள், மல்லித்துாள், உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து இறக்கவும்.சுவைமிக்க, 'மூலிகை தொக்கு!' தயார். சுடுசாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். இட்லிக்கு தொட்டுக்கொள்ளலாம். அனைத்து வயதினரும் விரும்புவர். - எஸ்.ராஜம், திருச்சி.