உள்ளூர் செய்திகள்

தோன்றியது எப்படி!

அமெரிக்காவில், மிகப்பெரிய பல்கலைக்கழகம் ஹார்வர்ட். அதன் தலைவரை சந்திக்க ஒரு தம்பதியர் வந்தனர். எளிமையான தோற்றம் கண்டு அனுமதிக்கவில்லை.பெரும் போராட்டத்துக்கு பின் அனுமதி பெற்று, 'இங்கு படித்த எங்கள் மகன், நோயால் இறந்தான், அவனுக்கு, ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப வந்தோம்...' என்றனர்.'ஹார்வர்ட் வளாகத்தில், சிலை போன்ற நினைவு சின்னங்களை எழுப்பினால் கல்லறை தோட்டமாக அல்லவா மாறிவிடும்...' என, கிண்டலாக பதிலளித்தார் தலைவர்.ஒரு கட்டடம், கட்டித் தர விரும்புவதாக கூறினர்.மிகவும் அலட்சியமாக, 'சிறிய பிளாக் கட்டவே, பல நுாறு கோடி ரூபாய் செலவாகும்' என்றார்.நைந்த உடையணிந்திருந்த அந்த பெண், 'இவ்வளவு தான் செலவாகுமென்றால், நாம் ஏன் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க கூடாது...' என, கணவரிடம் கூறினார். இருவரும் வெளியேறினர். அது, பெரும் பணக்காரரான லீலேண்டு ஸ்டேன்போர்டும் அவரது மனைவி ஜேனும் தான். உடனடியாக, அமெரிக்கா, கலிபோர்னியா மாநிலத்தில், மகன் நினைவாக, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !