உள்ளூர் செய்திகள்

நானும் விருந்தினன்தான்!

போலந்து நாட்டு துறவியாகிய ஹேபர்ட்ஸ் கெய்ம் என்பவர் எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார். அவரைச் சந்திப்பதற்காக வெளிநாட்டிலிருந்து பேராசிரியர் ஒருவர் வந்தார். துறவி தங்கியிருந்த அறையைப் பார்த்தார் அவர். அங்கே சில நூல்களும், கயிற்றுக் கட்டிலும், சில பாத்திரங்களும் தான் இருந்தன.வியப்பு அடைந்த அவர், ''துறவியாரே! உங்களுக்குத் தேவையான பொருள்கள் இங்கே இல்லையே... அவற்றை எல்லாம் எங்கே வைத்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.அதற்கு துறவி ''இங்கே உங்கள் பொருள்களும்தான் இல்லை'' என்றார்.''நான் இங்கே விருந்தினனாக வந்திருக்கிறேன். என் பொருள்கள் எப்படி இங்கே இருக்க முடியும்?'' என்று கேட்டார் அவர்.''அன்பரே! நானும் இந்த உலகத்தில் விருந்தினனாகத்தான் வந்திருக்கிறேன்,'' என்று பதில் தந்தார் துறவி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !