இளஸ்... மனஸ்... (63)
அன்புத் தங்கை பிளாரன்ஸ்...தனியார் பொறியியல் கல்லுாரியில், விரிவுரையாளராக பணிபுரிகிறேன். மத்திய அரசு அலுவலகத்தில், அதிகாரியாக பணிபுரிகிறார் என் கணவர்; ஒரே மகனுக்கு, 10 வயதாகிறது; 5ம் வகுப்பு படிக்கிறான்.மகன் நன்கு படிப்பான்; எங்கள் மீது பாசத்தை பொழிவான். அவனுக்குள்ள ஒரே பிரச்னை... சீருடை அணிந்து, கால்களில், 'பூட்ஸ்' மாட்டி, புத்தக மூட்டையை முதுகில் கோர்த்து, பள்ளி வேனுக்கு செல்லும் நேரத்தில், 'டூ பாத்ரூம் வருதுமா...' என கூறி, கழிப்பறைக்கு ஓடுவான். திரும்பிய பின்னும், 'டூ பாத்ரூம் வர்ற மாதிரியே இருக்கு...' என்று கூறுவான். பள்ளியில் வகுப்பு நடக்கும் நேரத்திலும், மதிய உணவு நேரத்திலும், மாலை வீடு திரும்பி டிபன் சாப்பிட்ட பின்பும், டவுசரை கழற்றி கழிப்பறைக்கு ஓடுவான். இந்த பழக்கத்தால், எந்த உறவினர் வீட்டு விசேஷத்துக்கும் அவனை அழைத்து செல்வதில்லை. இந்த, 'டூ பாத்ரூம்' குறைபாட்டை குணப்படுத்த என்ன செய்யலாம். நல் ஆலோசனை வழங்க வேண்டுகிறேன்.அன்புமிக்க அம்மா...மகனுக்கு இருக்கும் உடல் பிரச்னையின் பெயர், 'இர்ரிடேஷன் பவுல் சின்ட்ரோம்' என்பதாகும்; சுருக்கமாக, ஐ.பி.எஸ்., என்பர்; தமிழில், 'எரிச்சல் உடைய குடல் நோய்க்குறி' எனலாம்.உலகில், 18 சதவீத பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கிறது; 13 முதல், 40 வயதுள்ளவர்களை இது தாக்கக்கூடும். உயிர்கொல்லி அல்ல.இதன் அறிகுறிகள்...வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், மயக்கம், அடிவயிற்று வலி, வாயு தொந்தரவு, கட்டியாக அல்லது தண்ணீராக மலம் கழித்தல், எப்போதுமே மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, மலத்தில் சளி போன்று திரவம் வெளியேறுதல், தலைவலி, சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டும் என்ற உந்துதல், முழங்கால் மற்றும் தசை வலி, மனப்பதட்டம் மற்றும் மனச்சோர்வு.சிறு குடலில், கேடு தரும் பாக்டீரியா வளர்ச்சி, மன அழுத்தம், உணவு ஒவ்வாமை, பால் பொருட்கள், சில பழம் மற்றும் காய்கறிகள், வறுத்த கொழுப்பு மிக்க உணவுகள், வெங்காயம், காரட், பீன்ஸ், வாழைப்பழம், காபி, இனிப்பு மிட்டாய் போன்றவற்றை சாப்பிடுவதன் காரணமாக, இந்த குடல் நோய் வரலாம். மரபு ரீதியாக வரவும் வாய்ப்பிருக்கிறது.சிலருக்கு, சில ஆண்டுகளில் இந்த நோயை குணப்படுத்தி விடலாம்; சிலருக்கு ஆயுட்காலத்துக்கும் தொடரும். உன் மகனுக்கு, இந்த நோய் உள்ளதா என, சிடி ஸ்கேன், மல பரிசோதனை, ரத்தப் பரிசோதனை போன்றவற்றால் உறுதி செய்யவும்.நோய்க்கான அறிகுறிகள்:* வயிற்று போக்கும், மலச்சிக்கலும் கலந்த எரிச்சல்* வயிற்று போக்கு மட்டும் உள்ள குறி* மலச்சிக்கல் மட்டும் உள்ள குடல் நோய் குறிநோயை குணப்படுத்த கடைபிடிக்க வேண்டியவை:-* சரிவிகித சத்துள்ள உணவை மென்று உட்கொள்ளுதல் * இனிப்பு மற்றும், 'பபிள்கம்' தவிர்த்தல்* நார்சத்துள்ள உணவை அதிகம் உண்ணுதல்* குறிப்பிட்ட நேரத்தில் உண்ணுதல்* குளிர் பானங்களை தவிர்த்தல்* உடற்பயிற்சி, தியானம், யோகா போன்ற பயிற்சிகள்* மலம் கழிக்கும் உணர்வை மனதால் கட்டுப்படுத்துதல்* ஒரு நாளைக்கு இரு முறை கட்டாயம் மலம் கழித்தல்.இவற்றை கடைப்பிடித்தால், மகன் பூரண குணமடைய வாய்ப்புள்ளது.- பேரன்புடன், பிளாரன்ஸ்.