உள்ளூர் செய்திகள்

இந்திய துணைக்கண்டம்!

இந்திய துணைக்கண்டம்-இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூடான், மாலத்தீவு மற்றும் நேபாலை கொண்டது. பெரும்பான்மையான இப்பகுதி மக்கள் இந்து, இஸ்லாம் அல்லது புத்த மதத்தினை பின்பற்றுகின்றனர். இந்தியாவின் மிகப் பெரிய ஜனத் தொகையில் 80 சதவீதம் இந்துக்களாகும். ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மக்கள் புனித நகரான காசிக்கு யாத்திரை சென்று தங்கள் பாவங்களை கங்கையில் கரைக்கின்றனர்.தசரா பண்டிகை!மழைக்கால முடிவை கொண்டாடுவது தசரா பண்டிகை. மனித வடிவில் தோன்றிய இந்து கடவுளான ராமரின் வாழ்க்கை நாடகமாக நடத்தப்படுகிறது. முக்கிய பாத்திரங்களை தேர்ந்த நடிகர்கள் ஏற்று செய்து நாடகத்தை சிறப்பு செய்வர்.திருமண நாள்பெரும்பாலும் தங்கள் மகன் அல்லது மகளுக்கான வரனை பெற்றோர்களே தேர்ந்தெடுக்கின்றனர். தங்களுக்கு இணையான வரனையே அவர்கள் முடிவுசெய்வர். குழந்தை திருமணங்கள் முன்பு நடந்தன. இப்போது அவை சட்டத்தினால் தடுக்கப்பட்டு விட்டது. இந்துக்களின் திருமணம் மிக வண்ணமயமாகவும், மகிழ்ச்சியான குடும்ப வைபவமாகவும் நிகழும்.கிராமப்புற வாழ்க்கை!பத்தில் எட்டு இந்தியர்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். இந்தியாவின் ஜனத்தொகை, மாடுகளின் எண்ணிக்கையை விட வெறும் 3 மடங்கு தான் பெரியது. அந்த அளவு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இந்துக்கள் பசுக்களை புனிதமாக கருதுவதால், அவைகளை உண்பதில்லை.மலை ஏறு, மலை ஏறு!நேப்பாலிய ஷெர்பா மக்கள் உயர்ந்த இமாலயத்தில் வாழ்கின்றனர். பெரும்பாலான ஷெர்பா மக்கள் சுற்றுலாவாசிகளை, மலை ஏறுபவர்களை வழிகாட்டி, வழி நடத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்கின்றனர்.தலைமை பெண்!பாகிஸ்தானில் பெரும்பாலான மக்கள், முஸ்லீம்கள். 1988ம் ஆண்டு பெனாசிர் புட்டோ உலகின் முதல் இஸ்ஸாமிய நாட்டு பெண் பிரதம மந்திரியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பங்களாதேஷில் வெள்ளம்!பங்களாதேஷ், நிலை அமைப்பில் தாழ்வான நாடு. சுற்றிலும் நதிகள் உண்டு. கடும் மழைக்கு பின் வெள்ளத்தால் பெரிய பாதிப்பு இங்கு ஏற்படுகிறது. வடகிழக்கு பங்களாதேஷில் வெள்ளத்தில் நீந்திச் செல்லும் ரிக்ஷாக்கள்.சிவப்பு சூடான மசாலா!சாப்பாட்டிற்கு இந்தியாவில் தொட்டுக் கொள்ள வைக்கப்படும் காய்கறி, கூட்டு ஆகியவை உலக பிரசித்தம். அவைகளில் மசாலா முக்கிய இடம் பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !