தெரிஞ்சுக்குங்க!
* கடலுக்குள் விழும் தேங்காயை பிடிக்கும் திறன் கொண்டது திமிங்கலம். புதிதாய் பிறந்த திமிங்கலத்தின் முகவாயில் லேசாக ரோமங்கள் இருக்கும். இவை, விசில் ஒலி எழுப்பி, தொடர்பு கொள்ளும் திறன் பெற்றவை; ஒவ்வொன்றின் விசில் சத்தமும் வேறானவை. எதிரி பயத்தால், அரைக் கண் திறந்தபடி தான் திமிங்கலங்கள் துாங்கும். * சீனாவில் சிவப்பை அதிர்ஷ்டமாக கருதுவர்; வீட்டில் அதிர்ஷ்டம் வர சிவப்பு வண்ண மீன்களை வளர்ப்பர். உலகின் மிக விலை உயர்ந்த நாய் சிவப்பு வண்ணம் கொண்டது; வித்தியாசமாக காட்சியளிக்கும். இதன் விலை, 10.77 கோடி ரூபாய். சீன பணக்காரர் இதை வாங்கி வளர்த்து வருகிறார். சிவப்பு நாய் வளர்ப்பது சீனாவில் பேஷன்.-* முதன்முதலில், 'மைக்ரோ ஓவன்' கருவி தயாரிக்கப்பட்ட போது, 1.8மீட்டர் உயரமும், 340 கிலோ எடை உள்ளதாகவும் இருந்தது.* மொட்டை கழுகு என்ற பறவை சிறகை துடுப்பாக பயன்படுத்தி, கடலில் நீந்தும்.